இந்தியாவில் வேலையின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரிப்பு - kalviseithi

Nov 2, 2019

இந்தியாவில் வேலையின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரிப்பு


இந்தியாவில் வேலையின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. செப்டம்பரில் 7.2 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் அக்டோபரில் 1.3 சதவீதம் உயர்ந்துள்ளதாக பொருளாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் தொழில் உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் 48 மாவட்டங்களில் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஏராளமானோர் அந்த காலகட்டத்தில் பணி இழந்தனர். கடந்த 2017-2018 நிதி ஆண்டில், நாட்டில் ஒட்டுமொத்த வேலையின்மை சதவீதம் 6.1 ஆக உயர்ந்தது இது, நகரங்களில் 7.8 சதவீதமாகவும், கிராமங்களில் 5.3 சதவீதமாகவும் இருந்தது.

இந்தியா முழுவதும் உள்ள வேலையில்லாத ஆண்கள் சதவீதம் 6.2 ஆகவும்,  5.7 சதவீதமாக உயர்ந்திருந்து.  தற்போது தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத உயர்வு என்பது குறிப்பி்டத்தக்கது. இந்நிலையில் தற்போது அக்டோபர் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே போல் நாட்டின் முக்கிய 8 தொழில்துறைகளில் உற்பத்தி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த செப்டம்பரில் நாட்டின் ஒட்டுமொத்த தொழிற்துறை உற்பத்தி குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி கச்சா எண்ணெய், எரிவாயு, சிமென்ட், மின்சாரம், உரம் உள்ளிட்ட முக்கிய 8 தொழில்துறைகளின் உற்பத்தி வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உரம் தவிர்த்த ஏனைய 7 தொழில்களிலுமே சரிவு கண்டுள்ளன. 8 தொழில் துறைகளும் ஒட்டுமொத்தமாக 5.2 சதவீதமாக குறைந்துள்ளது. உரம் உற்பத்தி மட்டுமே 5.4 என்ற அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. அதிகபட்சமாக நிலக்கரி உற்பத்தி 30 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. பொருளாதார தேக்கநிலை சீராகியும் தொழில்துறை மீண்டும் வேகமெடுத்தால் மட்டுமே 8 அடிப்படை தொழில் உற்பத்தியும் அதிகரிக்கும் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி