தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், இரண்டாம் பருவ இடைநிலை தேர்வில், நடத்தாத பாடங்களுக்கு வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாக புகார்! - kalviseithi

Nov 10, 2019

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், இரண்டாம் பருவ இடைநிலை தேர்வில், நடத்தாத பாடங்களுக்கு வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாக புகார்!


தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறையும், மற்ற வகுப்புகளுக்கு, ஆண்டு இறுதி பொது தேர்வு முறையும் பின்பற்றப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில், முதல் பருவ தேர்வான காலாண்டு தேர்வு, அக்டோபரில் முடிந்தது. இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்படுகின்றன. இரண்டாம் பருவ தேர்வான அரையாண்டு தேர்வுக்கு முன், இரண்டாம் பருவஇடைநிலை தேர்வுகள், நவம்பர், 6ல் துவங்கின.

இந்த தேர்வில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, இந்த மாதம் இறுதியில் நடத்தி முடிக்கப்பட வேண்டிய பாடங்களுக்கு, தற்போதைய தேர்வில், வினாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.இதுவரை நடத்தாத பாடங்களில் இருந்து, இந்த தேர்வில் கேள்விகள் இடம் பெற்றுள்ளதால், அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுத முடியாமல், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

பள்ளி கல்வித்துறை வழங்கிய பாட குறிப்புகளின்படியே, ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். அதன்படி, நவம்பர் இறுதியில் நடத்த வேண்டியபாடங்களுக்கும் சேர்த்து, இடைநிலை பருவ தேர்வில், வினாக்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து, பள்ளி கல்வித்துறை உரிய உத்தரவை பிறப்பிக்க, மாணவர்களும், பெற்றோரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி