பேராசிரியர்களுக்கு அனுபவ சான்று தர தாமதமா? இயக்குநரகம் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2019

பேராசிரியர்களுக்கு அனுபவ சான்று தர தாமதமா? இயக்குநரகம் எச்சரிக்கை


அரசு வேலைக்கு செல்லும் பேராசிரியர்களுக்கு, அனுபவ சான்று வழங்க தாமதம் செய்ய வேண்டாம்' என, தனியார் பல்கலைகளுக்கு, கல்லுாரி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

கல்லுாரி கல்வி இயக்குநர் ஜோதி வெங்கடேசன், தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, புதிய பணி நியமனங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மேற் கொள்ளப்படுகின்றன. இதற்கு விண்ணப்பித்தவர்கள், தாங்கள்பணிபுரியும் கல்லுாரிகள், தனியார் பல்கலைகள் ஆகியவற்றில், பணி அனுபவ சான்று கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் தருமாறு, அனைத்து தனியார் பல்கலை பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பணிக்கு விண்ணப்பித்த பலர், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, தனியார் பல்கலைகள் மற்றும் பல்கலைகளின் இணைப்பு பெற்ற உறுப்பு கல்லுாரிகள், பணி அனுபவ சான்று தர மறுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, பணி அனுபவ சான்று வழங்கும் கல்வி நிறுவன அலுவலர்களுக்கு, உரிய அறிவுரைகளை வழங்க, கல்லுாரி கல்விஇயக்குனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

முதல்வரின் தனிப்பிரிவிலும் இதுகுறித்து, ஏராளமான புகார்கள் வந்துள்ளன. எனவே, தனியார் பல்கலைகளும், கல்லுாரிகளும் தங்களின் நிலைப்பாட்டை மாற்றி, அரசு வகுத்துள்ள சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, செயல்பட வேண்டும். எந்த புகாருக்கும் ஆளாகாமல், பணி அனுபவ சான்றை உரிய நேரத்தில் வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

14 comments:

 1. 1000 சுற்றறிக்கைகள் அனுப்பினாலும் சில கல்லூரிகள் தருவதில்லை யார் கேட்பது?

  ReplyDelete
 2. First intha govt ea waste.. apuram epadi service certificate epadi kudupanga.. exam vachathan intha problem pogum.. kalvi niruvangalum ithathan valiuruthukintrana..jd office laium work load athikamnu solranga..next dmk govt than itha sari seyamudium.. intha selection method big corruption kum 100% chence ..so exam is better..

  ReplyDelete
 3. no exam exam is full of corruption

  ReplyDelete
 4. any one say about collage trb case in court exam or interview

  ReplyDelete
 5. Is consolidated Mark sheet is compulsory to apply for assistant professor post. Or semester Mark sheets enough...

  ReplyDelete
  Replies
  1. They are asking to upload PG Consolidated Mark sheet, but I have only semester Mark sheets. Is this enough.

   Delete
  2. only tenth pg degree mphil net or set phd service certificate ..only these are to be uploaded.... Nothing else is asked... Don't worry...

   Delete
 6. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
  Call or whatsapp +91 9945317569

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி