இலவச பஸ்பாஸ் பள்ளிகளுக்கு உத்தரவு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2019

இலவச பஸ்பாஸ் பள்ளிகளுக்கு உத்தரவு!!


பள்ளிகளின் அலட்சியத்தால், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியில், தாமதம் ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஆண்டின் துவக்கத்தில், இந்த பாஸ் வழங்கப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு, காலதாமதம் ஏற்படுகிறது. மாணவர்களின் ரத்தப் பிரிவு, பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள், பஸ் பாஸ் விண்ணப்பங்களில் அளிக்கப்பட வேண்டும். ஆனால், பல பள்ளிகளில், இந்த விபரங்களை சேகரிக்காமல் விட்டதால், பஸ் பாஸ் வினியோகம்பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 
பெரும்பாலான பள்ளிகள், மாணவர்கள் விபரங்களை அனுப்பாமல் இருப்பதால், இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தந்த மாவட்ட போக்குவரத்து அலுவலகங்களில், மாணவர்களின் விபரங்களை விரைந்து தாக்கல் செய்து, இலவச பஸ் பாஸ் பெற்று, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில், காலதாமதம் செய்ய வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி