தமிழக பள்ளிகளில் விற்கப்படும் உணவுகளுக்கு தரக்கட்டுப்பாடு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2019

தமிழக பள்ளிகளில் விற்கப்படும் உணவுகளுக்கு தரக்கட்டுப்பாடு!!


நாட்டில் உள்ள உணவகங்களை வரன்முறை செய்யவும் மக்களுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.உணவகங்கள் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் அனைத்தையும் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விற்கப்படும் பிரசாதம் பொருட்கள் அனைத்தும் தர நிர்ணய கட்டுப்பாட்டு ஆணையத்திற்குள் உணவு பாதுகாப்பு துறை கொண்டு வந்துள்ளது.கோவில் வளாகம் மற்றும் வெளிப்புறங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்குவதற்காக அறநிலைய துறை குழு அமைத்துள்ளது.
அதேபோல பள்ளி, கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தண்ணீர் ஆகியவையும் தர நிர்ணயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
மக்களுக்கு தரமான உணவு பொருட்கள் கிடைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதனால் கோவில் பிரசாதம் முதல் குடிநீர், அன்னதானம் வரை அனைத்தையும் பரிசோதிக்கும் பணி துவங்கியுள்ளது. அதேபோல பள்ளி கல்லுாரி வளாகங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் பரிசோதிக்கப்படுகிறது.
மேலும் துரித உணவு வகைகளை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு அலுவலகம் முதல் தனியார் அலுவலகம் வரை ஒரு நாளைக்கு ஐந்து இடங்களில் சோதனை நடத்தவும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது, என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி