தொடக்க கல்வித்துறை கலந்தாய்வு - காலியிடம் இல்லை பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2019

தொடக்க கல்வித்துறை கலந்தாய்வு - காலியிடம் இல்லை பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சி


தொடக்க கல்வி துறை சார்பில் நேற்று தொடங்கிய கலந்தாய்வில் ெநல்லையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலி பணியிடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். கல்வித்துறை சார்பில்  ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடந்து வருகிறது. முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை வருவாய் மாவட்டத்திற்குள் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் பாளை சாராள்தக்கர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலந்தாய்வு நேற்று காலை தொடங்கியது. முதன்மை கல்வி அலுவலர் பூபதி முன்னிலையில் நடந்த கலந்தாய்வில் தொடக்க கல்வித்துறையில் உள் மாவட்ட அளவில் இடமாறுதல் கோரி  பட்டதாரி ஆசிரியர்கள் 20 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.ஆனால் நெல்லை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான காலி இடம் ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே உபரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ள நிலையில் மாறுதல் கோரிய ஆசிரியர்களுக்கு இடம் வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. இதனால் விண்ணப்பித்த பட்டதாரி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதை தொடர்ந்து பிற்பகல் வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு நடத்தப்பட்டது. 20ம் தேதி வரை கலந்தாய்வு நடக்க உள்ளது.

3 comments:

  1. 21/11/2019 second grade teachers kku district transfer irukkthu

    ReplyDelete
  2. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி