பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தனியார் பள்ளி சங்கங்கள் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2019

பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தனியார் பள்ளி சங்கங்கள் முடிவு


மாநில தனியார் பள்ளிகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து பள்ளிகளிலும் 'மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு' வரும் டிச.31ம் தேதிக்குள் ஏற்படுத்துவதென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

புதுச்சேரி மாநில சுயநிதி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது.அரும்பார்த்தபுரம் வி.மணவெளி சுபிக் ஷா ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் துளசி தலைமை தாங்கினார். பொருளாளர் சிவசுப்ரமணியன், இணைச்செயலர் சம்பத் முன்னிலை வகித்தனர். சுபிக் ஷா பள்ளி நிர்வாகி உமாமகேஸ்வரி வரவேற்றார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்வருமாறு:கூட்டமைப்பில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 'மழைநீர் சேகரிப்பு திட்டத்ததை' நடைமுறைப்படுத்துவது.இதற்கான கட்டமைப்பு பணிகளை வரும் டிச.31ம் தேதிக்குள் முடிப்பது. மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்று வரும் 1.5 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு 6,000 ஆசிரியர்கள் கல்வி போதித்து வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் நிதிச்சுமையை தனியார் பள்ளிகள் குறைத்துள்ளது.எனவே ஆசிரியர் பணிக்கு படித்து முடித்து அரசு வேலை கிடைக்காமல் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு புதுச்சேரி அரசு மாதம்தோறும் ரூ.10,000 ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளிகளுக்கு எவ்வித அடிப்படையும் இல்லாமல் கல்விக்கட்டண குழு நிர்ணயம் செய்துள்ள 'கல்வி கட்டணத்தை' மறுபரிசீலனை செய்து ஒரு சரியான அடிப்படை கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.தனியார் பள்ளிகள் அங்கிகாரத்தை ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்கும் நிலையை மாற்றி, ஐந்தாண்டுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அரியூர் ராமச்சந்திரா ஆங்கில உயர்நிலைப் பள்ளி நிர்வாகி சங்கரநாராயணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி