தமிழ்நாடு தபால்துறை வேலை வாயப்பு - உடனே விண்ணப்பிக்கலாம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2019

தமிழ்நாடு தபால்துறை வேலை வாயப்பு - உடனே விண்ணப்பிக்கலாம்!!


தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (Multi Tasking Staff),போஸ்ட் மேன்,போஸ்டர் அசிஸ்ட்டெண்ட் உள்ளிட்ட பணிகளுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விளையாட்டு வீரர்கள் காலியிடங்களுக்கு டிசம்பர் 31, 2019 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.

வேலைக்க விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை புகைப்படம் மற்றும் அது தொடர்பான ஆவணங்கனையும் அனுப்ப வேண்டும்.


காலியிடங்கள்
தமிழ்நாடு தபால் துறை காலிபணியிட விவரம்

மொத்த காலியிடங்கள்: 231

மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (Multi Tasking Staff (MTS)) -77

போஸ்டல் அசிஸ்டண்ட் (Postal Assistant/ Sorting Assistant) -89

போஸ்ட்மேன் (Postman) -65


தகுதி
போஸ்ட்மேன் பணிக்கு உள்ளூர் மொழி (தமிழ் தெரிந்திருக்க) வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி உடன் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கணினி பயிற்சி மையத்தில் அடிப்படை கணினி பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

மல்டி டாஸ்கிங் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி உடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.


போஸ்டல் அசிஸ்டண்ட் பணிக்கு 12 வது தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட கணினி பயிற்சி நிறுவனத்தில் அடிப்படை கணினி பயிற்சி படித்து சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்..சம்பளம்
மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (Multi Tasking Staff (MTS)) ரூ. 18,000 - 56,900

போஸ்டல் அசிஸ்டண்ட் (Postal Assistant/ Sorting Assistant) : ரூ 25,500 - 81,100

போஸ்ட்மேன் (Postman)- ரூ 21,700 - 69,100


எத்தனை வயது வரை
மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (MTS) 18 முதல் 27 வயது வரை

போஸ்டல் அசிஸ்டண்ட் 18 முதல் 27 வயது வரை

போஸ்ட்மேன் (Postman)- 18 முதல் 25 வயது வரை


விண்ணப்பிப்பது எப்படி
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் வயது , கல்வித்தகுதி உள்ளிட்டவற்றுக்கான சான்றிதழ்களை "உதவி இயக்குநர் (ஆட்சேர்ப்பு), தலைமை தபால் மாஸ்டர் ஜெனரல் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600002" என்ற முகவரிக்கு 2019 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரத்தை http://tamilnadupost.nic.in/ என்ற இணையத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி