உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2019

உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை


உதவி பேராசிரியர் நியமனத்திற்கு, எழுத்து தேர்வு நடத்த வேண்டும் என, பேராசிரியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர்கள் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக பணி நியமன நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. எழுத்து தேர்வு எதுவும் இல்லாமல், நேர்முக தேர்வு வழியாக ஆட்களைநியமிக்க, தேர்வு வாரியம் முடிவு செய்துஉள்ளது. இந்த முறைக்கு, கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பணி நியமனஅறிவிப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கல்லுாரி பேராசிரியர்கள் அங்கம் வகிக்கும், தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைப்பு தலைவர் மனோகரன், முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்:

இந்த பணிக்கான விதிமுறைகள், தரமான பட்டதாரிகளை தேர்வு செய்ய வழி வகுக்காது. உதவி பேராசிரியர் பணிக்கு, அடிப்படை கல்வி தகுதியான, பிஎச்.டி., மற்றும், 'நெட், செட்' தேர்வு தேர்ச்சி தேவை.ஆனால், அடிப்படை கல்வி தகுதிக்கே, ஆசிரியர் தேர்வு வாரியம் மதிப்பெண் வழங்குவதாக கூறுவது, வேடிக்கையாக உள்ளது. ஓர் உதவி பேராசிரியர், எட்டு ஆண்டுகள் பணி முடித்தால், அவர், இணை பேராசிரியர் பதவிக்கு தகுதியானவர். இந்த பணி நியமனத்தில், ஒவ்வோர் ஆண்டு அனுபவத்துக்கும், இரண்டு மதிப்பெண் என, அதிகபட்சமாக, ஏழு ஆண்டுகளுக்கான, 15 மதிப்பெண் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி பார்த்தால், உதவி பேராசிரியர் என்ற நுழைவு நிலை பதவிக்கு, இணை பேராசிரியருக்கான பணி அனுபவம் கேட்கப்பட்டுள்ளது. கல்லுாரிகளில் பணியாற்றிய அனுபவம் இருந்தால், அதற்கு மதிப்பெண் தருவதாக கூறப்பட்டுள்ளது. கல்லுாரிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு இணையாகவும், அதற்குமேலாகவும் அனுபவம் பெற்ற இளம் பட்டதாரிகள், தொழில்நுட்ப அறிவுடனும், ஆராய்ச்சி படிப்புகளுடனும் காத்திருக்கின்றனர்; அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், நேர்காணல் நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதில், யாருக்கு எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்பதில், வெளிப்படை தன்மை இருக்காது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான வழிமுறைகளையும், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., விதிமுறைகளையும் பின்பற்றி, எழுத்து தேர்வு நடத்தி, தகுதியானவர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

27 comments:

 1. Eppadi thervu seithal yezhai manavarkalukku nalla vaaippagum

  ReplyDelete
 2. Give equal opportunity to all eligible candidate and only written exam is right way to select deserve candidate

  ReplyDelete
 3. Replies
  1. Hai confidenta erunga exam varumpothu vaaipu ungalukkuda kidaikkum so confidenta erunga
   Yelloridamum 35 laksh katta amount erukathulla

   Delete
  2. Conducting exam only right.podi naye

   Delete
 4. Enketta knowldge eruku

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 5. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 7. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 9. Oruvela exam conduct pannalana corruptions solli courtla case poduvom nanga.furthera entha proceedingum pannavida mattom

  ReplyDelete
 10. Don't worry this exam will not completely done. ..become maximum corruption may be with come...so automatically cancel the exam by court...

  ReplyDelete
 11. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 13. Exam is betterway to select good assistant professor otherwise corruption lead to fix the posting

  ReplyDelete
 14. what happened to the written examination case?

  ReplyDelete
 15. Interview is the good way to selection.exam is full of corruption

  ReplyDelete
 16. Exam full of corruption example poytechic trb og trb corruption no need exam

  ReplyDelete
 17. Dear Bros & Sis. All cases filed in the court were dismissed.

  ReplyDelete
 18. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
  Call or whatsapp +91 9945317569

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி