உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அலுவலர்களுக்கு இன்று பயிற்சி - kalviseithi

Nov 5, 2019

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அலுவலர்களுக்கு இன்று பயிற்சி


உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தேசிய தகவல் மையம் வாயிலாக, அலுவலர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட உள்ளது.உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. அதேநேரத்தில்,தேர்தலை நடத்த, நான்கு வாரங்கள் அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. அதன்பின், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதுஒருபுறம் இருக்க, உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுக்கள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இதற்காக, புதிய சாப்ட்வேர் தயாரிக்கப் பட்டுள்ளது.இது குறித்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு, தேசிய தகவல் மையம் வாயிலாக பயிற்சி அளிக்க, மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. ஊரக உள்ளாட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் அலுவலர்களுக்கு, சென்னையில் இன்று பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

 நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் அலுவலர்களுக்கு, நாளை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும், ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி