கணினி ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2019

கணினி ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு


பொது தேர்வு பணிகளை கவனிக்க, 32 மாவட்டங்களிலும், கணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வு நடத்தப் படுகிறது.

தேர்வு பணிகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்வுக்கான மாணவர் விபரங்களை திரட்டுதல், தேர்வு மையம் அமைத்தல், வினாத்தாள் தயாரிப்பு, தேர்வுக்கான வெற்று விடைத்தாள் அச்சடித்தல், 'பார்கோடு' உருவாக்குவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளில், அரசு தேர்வு துறை பணியாளர்கள் மட்டுமே ஈடுபடுவது வழக்கம். ஆனால், அரசு தேர்வு துறை பணியாளர்கள் தரப்பில், ஆட்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்பட்டது.எனவே, பள்ளி கல்வி துறையினருக்கு, தேர்வு பணிகள் கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளன. அதன்படி, 32 மாவட்டங்களுக்கும், கணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்புகள் வழங்கப் பட்டுள்ளன. மாணவர்களின் விபரங்களைசேகரிக்கவும், அவற்றை கணினியில் பதிவு செய்யவும் வேண்டும் என, கணினி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இதில், 64 கணினி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இன்னும் பல்வேறு பணிகளுக்கு, பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கூடுதல் பணி வழங்க, தேர்வு துறை முடிவு செய்துள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

8 comments:

  1. Vennaikala first resulta podunkada computer teacher ku kududhal poruppan ponkada poi Vera velaiya parunkada

    ReplyDelete
  2. Kudukara 10,000 salary ku athikama work panitutha irukom ithula inum extra work thevaitha.

    ReplyDelete
  3. Kudukara 10,000 salary ku athikama work panitutha irukom ithula inum extra work thevaitha.

    ReplyDelete
  4. Kudukara 10,000 salary ku athikama work panitutha irukom ithula inum extra work thevaitha.

    ReplyDelete
  5. minister sir...please declare the computer science TRB results...we are waiting...

    ReplyDelete
  6. Computer teachers service wanted for every work , every where and every time but government does not appoints computer teachers

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி