மாணவிக்காக நிறுத்தப்பட்ட பஸ் டிரைவர், கண்டக்டருக்கு குவிகிறது பாராட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2019

மாணவிக்காக நிறுத்தப்பட்ட பஸ் டிரைவர், கண்டக்டருக்கு குவிகிறது பாராட்டு


மாணவியின் பாதுகாப்புக்காக, பஸ்சை நிறுத்திய, கேரள அரசு போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டரை, பலரும் பாராட்டியுள்ளனர்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. யாரும் இல்லை - இங்குள்ள கண்ணுாரைச் சேர்ந்த, ஜோசப் - எலியம்மா தம்பதியின் மகள் எல்சீனா. கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள கல்லுாரி ஒன்றில், எம்.பில்., படித்து வருகிறார்.

தன் படிப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக, கேரள மாநிலம், எர்ணாகுளத்துக்கு வந்திருந்தார். பின் கோட்டயம் மாவட்டம், கஞ்சிராப்பள்ளியில் உள்ள குடும்ப நண்பரின் வீட்டில் தங்குவதற்காக, 29ம் தேதி இரவு, எர்ணாகுளத்திலிருந்து கிளம்பினார்.இந்த பஸ், இரவு, 11:00 மணிக்கு, கஞ்சிராப்பள்ளியை வந்தடைந்தது. அன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தியதால், கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பஸ் நிறுத்தத்தில் யாரும் இல்லை. எல்சீனாவை அழைத்துச் செல்ல வருவதாக கூறியிருந்த அவரது குடும்ப நண்பரும் வரவில்லை. இதையடுத்து, எல்சீனாவின் குடும்ப நண்பர் வரும் வரை காத்திருக்க, பஸ் டிவைரரும், கண்டக்டரும் முடிவு செய்தனர்.

சமூக வலைதளம்

பஸ்சில் இருந்த மற்ற பயணியரும் இதற்கு சம்மதித்தனர். 15 நிமிடத்துக்குப் பின், எல்சீனாவின் குடும்ப நண்பர், காரில் வந்தார். கண்டக்டர், டிரைவர், மற்றும் பயணியருக்கு நன்றி தெரிவித்து, எல்சீனா நண்பருடன் சென்றார். இந்த சம்பவத்தை அறிந்த, கோட்டயம் மாவட்டம், பூஞ்சார் தொகுதியின், எம்.எல்.ஏ.,வான பி.சி.ஜார்க், பஸ் டிரைவர் டென்னிஸ் சேவியர், கண்டக்டர் ஜார்ஜ் ஆகியோரின் மனிதாபிமான செயலை பாராட்டி, சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டார். இந்த சம்பவத்தை வரவேற்றும், டிரைவர் மற்றும் கண்டக்டரை பாராட்டியும், பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

9 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி