அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பொதுத்தேர்வு மையங்கள் ரத்து - kalviseithi

Nov 6, 2019

அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பொதுத்தேர்வு மையங்கள் ரத்து


அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களை ரத்து செய்யும்படி, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த பொதுத்தேர்வில், பிளஸ் 1ல் மட்டும், வெறும் தேர்ச்சி மதிப்பெண் பெற்றால் போதும். மற்ற வகுப்புகளுக்கான தேர்வில், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே, உயர்கல்விக்கு செல்ல முடியும். நடப்பு கல்வி ஆண்டில், 10 முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளை, பள்ளி கல்வித்துறையும், அரசு தேர்வு துறையும் செய்து வருகின்றன.வினாத்தாள் தயாரிப்பு, விடை எழுதும் தாள் தயாரிப்பு, தேர்வுக்கான மாணவர் விபரங்கள் சேகரிப்பு உள்ளிட்ட பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன. இதைத்தொடர்ந்து, பிளஸ் 2வுக்கு தேர்வு மையங்களை ஒதுக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

இது குறித்து, மாநிலம் முழுவதும் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை இணை இயக்குநர் ராமசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க உள்ள, அனைத்து பள்ளிகளின் மாணவர்களையும், சரியாக கணக்கிட்டு, அதன்படி தேர்வு மையத்தை நிர்ணயிக்க வேண்டும். தேர்வு மையம் ஒதுக்க வேண்டிய பள்ளிகளின் பெயர், அங்கீகார விபரங்கள், உள் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை, முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.ஏற்கனவே, தேர்வு மையங்களாக செயல்பட்ட பள்ளிகளின் விபரங்கள், ஆய்வு செய்யப்பட வேண்டும். புதிதாக தேர்வு மையங்கள் கேட்டுள்ள பள்ளிகளின் விபரங்கள், தனியாக இணைக்கப்பட வேண்டும்.

தேர்வு மையங்களாக செயல்பட உள்ள பள்ளிகள், அரசின் அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். அங்கீகாரம் பெறாத பள்ளிகள், தேர்வு மையமாக செயல்பட முடியாது. இதில் விதிமீறலோ, தவறுகளோ ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி