CBSC மாணவர்கள் +2 தேர்வு எழுதுவதில் சிக்கல்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2019

CBSC மாணவர்கள் +2 தேர்வு எழுதுவதில் சிக்கல்?

பிளஸ் 1 பொது தேர்வு எழுதாத, சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, தமிழக பாடத்திட்டத்தில் நேரடியாக, பிளஸ் 2 தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏற்கனவே பொது தேர்வு நடந்து வந்தது. ஆனால், &'நீட்&' மற்றும் ஜே.இ.இ., போன்ற போட்டி தேர்வுகளில், மாணவர்கள் திறம்பட செயல்படும் வகையில், பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1 பொது தேர்வு துவங்கப்பட்டது. 

இந்நிலையில், பிளஸ் 1 பொது தேர்வில் பங்கேற்று, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்க முடியும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இருந்து, தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 சேர்ந்தவர்களுக்கு, பொது தேர்வு எழுதுவதில், திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதாவது, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 1ல், பள்ளி அளவில் மட்டுமே தேர்வு நடத்தப்படும். ஆனால், மாநில பாடத்திட்டத்தில், பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. 

எனவே, பிளஸ் 1ல் பொது தேர்வு எழுதாத, சி.பி.எஸ்.இ., மாணவர்களை, பிளஸ் 2 பொது தேர்வில், எப்படி அனுமதி அளிப்பது என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்த விவகாரம் குறித்து, அரசு தேர்வு துறை மற்றும் பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னையில், சட்ட ரீதியான முடிவு எடுத்து, அரசாணை வெளியிட்டால் மட்டுமே, சி.பி.எஸ்.இ., மாணவர்களை, பொது தேர்வில் பங்கேற்க வைக்க முடியும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

1 comment:

  1. News ah olunga podunga da dei. Cbse board la +1 padichutu state board la epdi +2 padika mudiyum. Erkanave +1 stateboard la common exam ila. Ipo iruku, apo +2 stateboard la padikanuna avan +1 stateboard la than padichu aganum, eppadi varusathuku oru time board matha mudiyum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி