மத்திய அரசுத்துறைகளில் 6.83 லட்சம் காலியிடங்கள்!! மத்திய அமைச்சர் தகவல்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2019

மத்திய அரசுத்துறைகளில் 6.83 லட்சம் காலியிடங்கள்!! மத்திய அமைச்சர் தகவல்!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 6.83 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் ராஜ்யசபாவில் நேற்று தெரிவித்தார்.
இது குறித்து எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் அவர் கூறியதாவது: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மார்ச் 1, 2018 நிலவரப்படி 6.83 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் &'குரூப்-சி&' பிரிவில் 5.74 லட்சம் இடங்களும், &'குரூப் - பி&' பிரிவில் 89 ஆயிரம் இடங்களும், &'குரூப் - ஏ&' பிரிவில் 19 ஆயிரம் இடங்களும் காலியாக உள்ளன.

சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் 2019 -20ல் 1.05 பணியிடங்களை நிரப்பும் பணியை பணியாளர் தேர்வாணையம் துவக்கி உள்ளது. மொத்தத்தில் 4.08 லட்சம் காலி பணியிடங்களை நிரப்பும் பணியில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தபால் துறை ஈடுபட்டுள்ளன. தேர்வு முறைகளை காலதாமதமின்றி செய்ய &'ஆன்லைன்&' முறையிலான எழுத்து தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

சி.பி.ஐ.யில் 1,000 பணியிடங்கள் காலி

சி.பி.ஐ.யில் 5,532 ஊழியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் தற்போது 4503 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் 1,029 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி