School Morning Prayer Activities - 18.11.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2019

School Morning Prayer Activities - 18.11.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.11.19

திருக்குறள்


அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:322

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

விளக்கம்:

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

பழமொழி

A drawing man will catch at a straw

நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. சுத்தம் சுகம் தரும். எனவே எப்போதும் சுய சுத்தம், சுற்றுப்புற சுத்தம் பேணுவேன்.

2. என்னுடைய அகமும் தூய்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்.

பொன்மொழி

இனம் மதம் வேறுபாடுகள் இயற்கைக்கும் செயற்கைக்கும் தெரியாது. எல்லாம் பயன்பாட்டின் விளைவுகளே...

------இறையன்பு அவர்கள்

பொது அறிவு

 1. பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் அமிலம் எது?
 கந்தக அமிலம்.

2. மணலில் அதிகமாக காணப்படும் வேதிப்பொருள் எது?
 சிலிகான்(சிலிகான் டை ஆக்சைடு அல்லது சிலிக்கேட் ஆக உள்ளது)

English words & meanings

Ichthyology – study of fish.மீனியலானது, கடல்சார் உயிரியல், ஏரியியல், மீன்பிடி அறிவியல் போன்ற துறைகளோடு தொடர்புடைய து. இது விலங்கியலின் ஒரு பிரிவு ஆகும்.

 Iceberg - large pieces of fresh water ice. பனியாற்றில் இருந்து பிரிந்த பனிக்கட்டி

ஆரோக்ய வாழ்வு

தீராத தலைவலி நீங்க புதினா எண்ணெயை நெற்றியில் வைக்கலாம். இவ்வெண்ணெயைக் கொண்டு ஆவியும் பிடிக்கலாம்.

Some important  abbreviations for students

* GL - Good luck

* GJ - Good job

நீதிக்கதை

குருடரின் விளக்கு

ஒரு கிராமத்தில் கண் பார்வையற்ற முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் இரவு வேளையில் எப்போது வெளியே சென்றாலும் கையில் ஒரு விளக்கை எடுத்து செல்வது வழக்கம். இவர் அவ்வாறு ஒருமுறை வெளியே கையில் விளக்கோடு சென்றபோது, அவ்வழியாக வந்த வாலிபர்கள் சிலர் முதியவரை பார்த்தனர்.

முதியவரின் அருகே வந்த அவர்கள் மரியாதையின்றி, உனக்குத்தான் கண் தெரியாதே, பின் எதற்காக கையில் விளக்கை எடுத்து செல்கிறாய் என கேலி செய்து சிரித்தனர்.

வாலிபர்களின் கேள்விக்கு நிதானமாக பதில் அளித்த அந்த முதியவர். எனக்கு கண் தெரியாது என்பது உண்மை தான். ஆனால், இந்த விளக்கை நான் எனக்காக கொண்டு வரவில்லை. உங்களைபோல கண் நன்றாக தெரிந்தவர்கள் என் மீது மோதாமல் இருக்கத்தான் இந்த விளக்கு என்றார். முதியவரின் பதிலை கேட்ட வாலிபர்கள் தங்களது முட்டாள்தனமான செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.

இன்றைய செய்திகள்

17.11.19

* அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பது நிறுத்தப்பட்டதும் தில்லியில் காற்றின் தரம் சீரடைந்துள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

* அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்திய ரயில்கள் அனைத்தும் மின் மயமாக்கப்படும் - பியூஷ் கோயல்

* கடந்த 2018ல் இந்தியாவில், அதிக சாலை விபத்துகள் நடந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

*தமிழக அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு.... 10ம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

 * அக்னி ஏவுகணையை இரவு நேரத்தில் ஏவி பரிசோதனை செய்யும் முயற்சியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

* சா்வதேச நட்பு கால்பந்து: பிரேசிலை வென்றது ஆா்ஜென்டீனா

* விராட் கோலி தலைமையில் இந்திய அணிக்கு 10வது இன்னிங்ஸ் வெற்றி: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஒரே வரியில் பாராட்டு.

Today's Headlines

🌸NewDelhi chief minister Arvind Kejriwal has said that the quality of air pollution in Delhi has deteriorated after the burning of crops in neighboring states has stopped.

 🌸All Indian trains will be electrified in four years - Push Goyal.

 🌸 In 2018, Tamil Nadu tops the list of more road accidents states in India.

 🌸Those who have completed 10th class can apply for Tamil Nadu Postal Department Circle .

  🌸India has succeeded in launching the Agni missile at night.

🌸 International friendly football: Brazil beat Argentina.

🌸10th innings victory for Virat Kohli's captainship was said in single line by former England captain.

Prepared by
Covai women ICT_போதிமரம்

1 comment:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி