பள்ளிகளில் 'வாட்டர் பெல்' ( Water Bell ) திட்டம் இன்று முதல் அமல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2019

பள்ளிகளில் 'வாட்டர் பெல்' ( Water Bell ) திட்டம் இன்று முதல் அமல்!


மாணவர்கள் தண்ணீர் குடிக்க வசதியாக புதுச்சேரி பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் இன்று (25ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

பாடச்சுமை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்த நேரம் கிடைக்கவில்லை,இதனால், மாணவர்கள் சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என, பெற்றோர் தரப்பில் அரசுக்கு புகார்கள் வந்தது.அதையடுத்து, கலெக்டர் அருண், குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய தலைவி தேவிப்பிரியா, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு உள்ளிட்ட அதிகாரிகள், புதுச்சேரியில் உள்ள 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகளை அழைத்து, ஆலோசனை நடத்தினர்.அதில், அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பள்ளி வேலை நேரம் பின்பற்ற வேண்டும், மாணவர்கள் பள்ளிகளில் போதிய அளவில் தண்ணீர் அருந்தாததால், மாணவர்களின் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாவதாக டாக்டர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் வீட்டிலிருந்து எடுத்து செல்லும் பாட்டிலில் உள்ள தண்ணீரை கூட குடிக்காமல் அப்படியே எடுத்து வருவதாகவும், அதற்கு பள்ளிகளில் தண்ணீர் குடிக்க அவகாசம் இல்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நாௌான்றுக்கு நான்கு முறை மாணவர்கள் தண்ணீர் பருக வசதியாக தண்ணீர் அருந்த மணி (வாட்டர் பெல்) அடிக்க உத்தரவிட்டார்.

அதன்படி புதுச்சேரி பள்ளிகளில் 'வாட்டார் பெல்' திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.வாட்டார் பெல் திட்டம் அமல்படுத்துவதையொட்டி,சில தனியார் பள்ளிகள் விடும் நேரம் 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி