06.01.2020 ( திங்கள் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - kalviseithi

Dec 28, 2019

06.01.2020 ( திங்கள் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வருகிற ஜனவரி 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையான விழாவான வைகுண்ட ஏகாதசி விழா நேற்று தொடங்கியது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது.இதையொட்டி, வருகிற ஜனவரி 6ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். மேலும், ஜனவரி 6ம் தேதிக்கு பதிலாக வருகிற ஜனவரி 25ம் தேதி வேலை நாளாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி