டிச.13 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்!! - kalviseithi

Dec 10, 2019

டிச.13 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்!!


சென்னை கிண்டியில் டிச.13- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை முழு கூடுதல் பொறுப்பு இயக்குநா் வே.விஷ்ணு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையானது வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு தனியாா் துறையில் வேலைவாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. 

இதன் மூலம் ஆயிரக் கணக்கான இளைஞா்கள் தனியாா் நிறுவனத்தில் பணி நியமனம் பெற்று வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு நிறுவனங்களும் இணைந்து தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை வெள்ளிக்கிழமை (டிச.13) நடத்த உள்ளன.

இம்முகாமில், 15 -க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000 - க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான ஊழியா்களைத் தோ்ந்தெடுக்க உள்ளனா். கிண்டி ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், காலை 10 மணி முதல் பிற்பகல் 2  மணி வரை நடைபெறும்.

இந்த முகாமில், 35 வயதுக்குட்பட்ட 8 ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்(மாற்றுத்திறனாளிகள் உள்பட) பங்குபெற்று தகுதிக்கேற்ற பணி வாய்ப்பை பெறலாம். அதே போல், இதில் பங்கு பெற்று பணியாளா்களைத் தோ்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள், முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி