
தேர்வர்கள் திட்டமிட்டு தேர்வுகளுக்கு தயாராவதை கருத்தில் கொண்டு இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி வரும் ஆண்டுகளில் குரூப்-1 தேர்வுக்கான முதனிலைத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.
அதன் முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்திலேயே முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதற்கான முடிவுகள் நவம்பர் மாதம் அறிவிக்கப்படுவதோடு, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நேர்முகத் தேர்வும், டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் கலந்தாய்வு நடத்தி இறுதி முடிவுகளும் வெளியிடப்படும். அதே போல் குரூப்-2, குரூப் 4 தேர்வுகளுக்கும் நிலையான கால அட்டவணையை விரைவில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் - முதனிலைத் தேர்வு
மே மாதம் - முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
ஜுலை மாதம் - முதன்மை எழுத்துத் தேர்வு
நவம்பர் மாதம் - முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு
டிசம்பர் மாதம் (முதல் வாரம்) - நேர்முகத் தேர்வு
டிசம்பர் மாதம் (இறுதி வாரம்) - கலந்தாய்வு, இறுதி முடிவுகள்.
tnpsc is excellent. but our trb is very very waste.
ReplyDeleteTrb wonderful✨😍✨😍✨😍✨😍✨😍
ReplyDelete