மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் மற்றும் 2011,2012 முதல் 2019 - 2020 முடிய ERP Entry செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - kalviseithi

Dec 19, 2019

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் மற்றும் 2011,2012 முதல் 2019 - 2020 முடிய ERP Entry செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


 தலைமைச் செயலகத்தில் சிறப்புத் திட்ட செயலாத்துறை இயக்குநரின் தலைமையில் 03.12.2019 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி , 2019 - 2020 - ம் ஆண்டில் +1 மற்றும் +2 பயிலும் மாணவர்களுக்கு முழுமையாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுவிட்டநிலையில் , மடிக்கணினிகள் பெற்ற +1 மாணவர்களின் விவரங்களை EMIS மென்பொருளிலும் , +2 மாணவர்களின் விவரங்களை ERP மென்பொருளிலும் உடனடியாக பதிவேற்றம் செய்யவும் , 2011 - 2012 முதல் 2019 - 2020 முடிய மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் நேரடியாக கண்காணித்து 20.12.2019ற்குள் முழுமையாக பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கைமேற்கெள்வதுடன் , மேற்படி பணியை முடித்தமையாக முடித்தமைக்கான அறிக்கையினை உடன் இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள் வேண்டும் .

2017 - 2018 மற்றும் 2018 - 2019 - ம் கல்வியாண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு Bonafied Certificate பெற்றுக்கொண்டு மடிக்கணினி வழங்கும்போது அவர்களின் மதிப்பெண் சான்றின் பின்புறத்தில் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரை பதித்து தலைமையாசிரியர் கையொப்பம் இட வேண்டும் .


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி