கல்விக்கும் சோதனை - தினகரன் தலையங்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2019

கல்விக்கும் சோதனை - தினகரன் தலையங்கம்!


தமிழக பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி பள்ளிக்கல் வித்துறைக்கு ஒதுக்கப்படுகிறது . ஏழை , எளிய மாணவர்கள் அனைவருக்கும் கல்வி எட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் வரிப்பணம் கல்வித்துறைக்கு அளிக்கப்படுகிறது . ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன ? . தனியார் கல்வி நிறுவனங்கள் வளம் கொழிக்கும் நிலையில் அரசு பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன . பள்ளிகளை மட்டுமல்ல ஆசிரியர்களையும் இந்த அரசு விட்டு வைக்க வில்லை . உபரி என்று கணக்கெடுக்கப்பட்டுள்ள 12 ஆயிரத்து 109 பட்டதாரி ஆசிரியர்களில் 2600 ஆசிரியர்களை பணியிறக்கம் செய்து தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள இடங்களில் பணி நிரவல் செய்ய முடிவு செய்து அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது . 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு மட்டும் இவர்கள் பாடம் எடுக்க அனுமதிக் கப்படுவார்கள் , ஊதியம் மற்றும் பணிநிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று உத்தரவாதம் வேறு அளித்திருக்கிறது அரசு . பட்டதாரி ஆசிரி யர்கள் என்று தேர்வு செய்து விட்டு தொடக்கப்பள்ளிகளுக்கு அவர்களை அனுப்பும் அவசியம் இந்த அரசுக்கு ஏன் வந்தது ?

காமராஜர் ஆட்சிக் காலத்தில் , பள்ளி செல்லும் குழந்தைகளை விட , செல்லாதவர்கள் அதிகம் . காரணம் போதுமான பள்ளிகள் இல்லை . கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் . 3 கிலோ மீட்டர்துாரத்திற்கு ஒரு பள்ளி இருக்க வேண்டும் . அங்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்று கல்வியை தமிழகத்தில் கால் ஊன்ற செய்தவர் காமராஜர் . பின்னர் எம்ஜி . ஆர் ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது . இன்று ஒவ்வொரு கிராமங்களிலும் கூட தனியார் பள்ளிகள் தோன்றிவிட்டன . இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் சரிவை சந்தித்து வருகின்றன . இந்த கல்வியாண்டில் 1531 அரசு பள்ளிகள் வெறும் 10 மாணவர்களுடன் செயல்பட்டு வருகி றது . விருதுநகர் , கரூர் , திண்டுக்கல் , கிருஷ்ண கிரி , மதுரை , நாமக்கல் , சிவகங்கை மாவட்டங்க ளில் தலா 3 பள்ளிகளிலும் , நீலகிரி , தர்மபுரி , திருவண்ணாமலை , வேலூர் மாவட்டங்களில் 4 பள்ளிகளிலும் ஒரு மாணவர்கள் கூட இல்லை . ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் ஒருமாணவர் கூட சேராத 50 பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட உள்ளன .

பள்ளிக்கல்வித்துறையை மறுசீரமைப்பு செய்வதற்கும் , மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் இந்த அரசிடம் திட்டங்கள் எதுவும் இல்லை . பட்ஜெட் நிதியை கொண்டு கல்வித் துறை கட்டமைப்பை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை . ஆனால் இந்த கல்வியாண்டில் 1 லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசு பள்ளிகளில் சேர்ந்துவிட்டார்கள் என்று பெருமை பாராட்டுகிறது பள்ளிகல்வித்துறை . ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் 4 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடப்பட வேண்டிய நிலைக்கு வந்திருப்பதை கண்டுகொள்ளவில்லை . இப்படியே சென்றால் பள்ளிக்கல்வித்துறைக்கு என்று தனியே ஒரு துறை தமிழகத்திற்கு தேவைப்படாத சூழல் உருவாகலாம் .

3 comments:

  1. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்தால் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறையும்.

    ReplyDelete
  2. Appo 226000 govt teacherla 100000 per avanga pasangala arasu palliyil serthaave pothume...

    ReplyDelete
  3. கல்விக்கு மட்டும் அல்ல மக்களுக்கும் சேர்த்து தான் இது சோதனைக் காலம்.
    ஏனெனில்
    ரேசனில் விலைமலிவாக கிடைக்கும் உணவுப்பொருட்களைக்குறைக்கிறது மத்திய அரசு..
    இதனால் விலைகொடுத்துவாங்கும் நிலைக்கு சாமானியர்கள் மீதல் நடுத்தர வர்க்கம் வரையில் பாதிக்கப்படுகிறார்கள்..
    இது ஒருபுறம் இருக்க இலவசமாக கிடைப்பதால் மட்டுமே குழந்தைகளையும்,சிறுவர்களையும் பள்ளிக்கு அனுப்பும் சாமானியனுக்கு இனி அருகாமையில் பள்ளிகலில்லையென்றால் வேறுவழியின்றி, வருமானத்திற்காக கூலிவேளைக்கும்,கொத்தடிமைவேளைக்கும் அனுப்பும் நிலைக்கு அரசே தள்ளுகிறது..
    காமராஜரும்,கலைஞரும், எம்ஜிஆரும்,ஜெயலலிதாவும் தமிழக கல்வித்துறையை இந்தியாவிற்கே முன்உதாரணமாக்கி வைத்துவிட்டுச்சென்றார்கள்....
    ஆனால்
    தற்போது
    மத்திய அரசின் சார்பிலும் சரி தமிழக அரசின் சார்பிலும் சரி தமிழக கல்வித்துறையை எப்படியேனும் உத்திரப்பிரதேசம் அல்லது அதற்கும் கீழான நிலையில் உள்ள மாநிலத்திற்கு போட்டிபோடும் அளவுக்கு பின்னோக்கி இழுத்து கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...
    பொருளாதாரத்தையும்,கல்வியையும் உரிமையாகக்கருதி அனைத்து விதமான மக்களுக்கும் இலவசமாக கிடைக்கச்செய்யும் அரசே நல்ல அரசு...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி