246 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2019

246 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரம்!!


கடலுார் மாவட்டத்தில், 246 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த, கல்வி துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

குறிப்பாக, அரசு பள்ளிகளில் கணினி, மடிக்கணினி வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது.இதற்காக, இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஒன்றிரண்டு எண்ணிக்கையில் கணினி, மடிக்கணினி உள்ளதால், கல்வி கற்பிப்பதிலும், ஆசிரியர்கள், மாணவ, மாணவியரின் வருகை பதிவேடு விவரங்கள், நலத்திட்ட உதவி பெறுவோர் எண்ணிக்கை, அனைத்து தேர்வு தொடர்பான விவரங்கள் பதிவேற்றம் செய்வதிலும், நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. 

இதனை கருத்தில் கொண்டு மாவட்டம் வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்க பள்ளி கல்வி துறை திட்டமிட்டது.

அதன்படி, கடலுார் மாவட்டத்திலும் உயர் ரக தொழில் நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடக்கிறது. மாவட்டத்தில் 246 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளன. 

இதில், 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 10 கம்ப்யூட்டர்கள், மேல்நிலை பள்ளிகளில் 20 கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு, இணையதள வசதி ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. 

இதுவரை 206 பள்ளிகளில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளில் ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஒவ்வொரு வகுப்பு மாணவ, மாணவியருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படும். குறிப்பாக, கம்ப்யூட்டர் இயக்குவது, பாடம் சார்ந்த தகவல்கள் பெறுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். மேலும், ஆசிரியர், மாணவ, மாணவியரின் வருகை பதிவேடு விவரங்கள், அனைத்து தேர்வுகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யலாம். நுழைவுத் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பணிகள் முடிவடைந்ததும், விரைவில் கணினி மூலமாக கல்வி கற்பிக்கப் படும் என்றார்.

1 comment:

  1. யானைக்கு சோளப்பொரிஉருண்டைகொடுப்பதுபோல் உள்ளது.
    தமிழக முழுவதும் உள்ள அரசுப்பள்ளியை மேம்படுத்தினால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும்,
    மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும்,
    அதே நேரத்தில்
    அரசுமக்களின் நலத்திடங்கள்,
    அரசுத்தேர்வான online exams போன்றவைகளை அரசுப்பள்ளிகளிலேயே இருக்கும் கட்டமைப்பை பயன்படுத்தி நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதோடு,
    தனியாரில் நடக்கும் முறைகேட்டையும் தடுக்கலாம்..
    இதன் மூலம் அரசுப்பள்ளிகளை மேலும் வளர்ச்சி நோக்கி கொண்டு செல்ல முடியும்..
    இல்லையேல்
    சாமானியனுக்கு கல்வி எடாக் கனியாக்கும் நிலைக்குத் தான் தள்ளும் அரசின் கொள்ளை(கை) முடிவு...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி