பிளஸ் 2 புத்தகத்தில் திருத்தம் ஆசிரியர் குழு அமைப்பு - kalviseithi

Dec 16, 2019

பிளஸ் 2 புத்தகத்தில் திருத்தம் ஆசிரியர் குழு அமைப்பு


பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப் புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்ள ஆசிரியர் குழுவை பள்ளி கல்வி துறை அமைத்துள்ளது.

தமிழக பள்ளி கல்வி துறையில் உள்ள சமச்சீர் கல்வி பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ளது. 2018 - 19ம் கல்வி ஆண்டில் சில வகுப்புகளுக்கும் நடப்பு கல்வி ஆண்டில் சில வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளபுத்தகங்களில் பல்வேறு பிழைகள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மிகவும் குறுகிய காலத்தில் இது தயாரிக்கப்பட்டதால் இந்த பிரச்னை எழுந்துள்ளதாக தயாரிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் முதல் கட்டமாக பொது தேர்வுக்கான பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 புத்தகங்களை மட்டும் திருத்தம் செய்யவும் சில பாடங்களை நீக்கவும் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் பழனிசாமி மேற்பார்வையில் ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆய்வு செய்து உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உள்ளனர்.இந்த ஆசிரியர் குழுவினருக்கு இன்று முதல் வரும் 20ம் தேதி வரை பாடவாரியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி