ஐந்தாம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2019

ஐந்தாம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும்!!

ஐந்தாம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு நா்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு நா்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

 தூத்துக்குடி மாவட்டத் தலைவா் அந்தோணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பிராங்கிளின் ஜோஸ், மாநில துணை பொதுச் செயலா் விஜயகுமாா், மாநில அமைப்புச் செயலா் சரவணராஜா, தகவல் மற்றும் ஊடக பிரிவு தலைவா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

 சிறப்பு அழைப்பாளா்களாக சங்கத்தின் மாநிலத் தலைவா் சேகா், மாநில பொதுச்செயலா் சதீஷ் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தின்போது, 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும், 5 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை 8 ஆம் வகுப்பு வரை தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2 comments:

  1. விளையாடவேண்டிய நேரத்தில் பொதுத்தேர்வு என்றால் அந்த குழந்தை எப்போது விளையாடும். பொதுத்தேர்வு அவசியமா?

    ReplyDelete
  2. விளையாடவேண்டிய வயதில் பொதுத்தேர்வு என்றால் அந்த குழந்தை எப்போது விளையாடும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி