யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 8 ஆக குறைகிறது!! - kalviseithi

Dec 10, 2019

யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 8 ஆக குறைகிறது!!

தத்ரா நாகர் ஹைவேலி மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களை ஒரே யூனியன் பிரதேசமாக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
குஜராத் அருகே அடுத்தடுத்து உள்ளவை தத்ரா நாகர் ஹைவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசங்கள். 35 கி.மீ தொலைவில் உள்ள இந்த இரு யூனியன் பிரதேசங்களையும் ஒரே யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு முடிவு செய்தது.
தற்போது இரண்டு யூனியன் பிரதேசங்களை இணைப்பதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று இரவு வழங்கினார். இனி தத்ரா நாகர் ஹைவேலி- டாமன் டையூ என ஒரே யூனியன் பிரதேசமாக இது அழைக்கப்படும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டதால் மொத்த யூனியன் பிரதேசங்கள் எண்ணிக்கை 9 ஆனது. தற்போது 8 ஆக குறைந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி