பின்பற்றுமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை தரும் நேரங்களான காலை 9 மணி வரை பச்சை நிறம், 9 மணி முதல் 9.15 மணி வரை - மஞ்சள் நிறம் மற்றும் 9.15 மணி முதல் 9.30 மணி வரை - சிவப்பு நிறமாக தொட்டுணர் கருவி பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2. ஒரு ஆசிரியருக்கு 3 நாட்கள் சிவப்பு நிறமாக தொட்டுணர் கருவியில் பதிவு இருப்பின் 1/2 நாள் தற்செயல் விடுப்பாக கணக்கிடப்பட வேண்டும்.
3. பள்ளியில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் காலை 10.00 மணியளவில் பணிக்கு வருபவராயின் காலை 10.00 மணிக்கும் மாலை 6.00 மணிக்கும் தொட்டுணர் கருவியில்
பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
4, சிறப்பு வகுப்பு மேற்கொள்ளும் ஆசிரியர்கள் காலை ஒரு மணி நேரம் முன்னதாகவும், மாலையில் ஒரு மணி நேரம் பின்னதாகவும் தொட்டுணர் கருவியில் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது வரை வருகை பதிவு குறித்து எந்த விதமான உத்தரவும் அரசு பிறப்பிக்கவில்லை. மாவட்ட கல்வி அலுவலர் தன்னிச்சையாக பிறப்பித்துள்ளார். இது அந்த கல்வி மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். எனவே மற்ற மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் இதைக்கண்டு எந்தவிதமான கலக்கமடைய தேவையில்லை. இதுவரை நிறங்கள் குறித்து எந்தவிதமான தகவலும் அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளி இயங்கும் சூழ்நிலை அந்தந்த பள்ளிகளின் அமைவிடத்தை பொருத்து மாறுபடும்.
ReplyDeleteஅனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்தினால் நல்லது.
ReplyDeleteஇதை நான் வரவேற்கிறேன்.
ReplyDelete