தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனம் ரத்து: ஹைகோர்ட் உத்தரவு!! - kalviseithi

Dec 20, 2019

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனம் ரத்து: ஹைகோர்ட் உத்தரவு!!


தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரது நியமனத்தில் விதிமீறல் உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

உரிய கல்வித்தகுதி இன்றி, பாலசுப்பிரமணியன் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவிம். எனவே அவரது நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் பேராசிரியர் ரவீந்திரன் தனது மனுவில் கூறியிருந்தார்.

பேராசிரியர் ரவீந்தினின் மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வேலுமணி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி