புதிய ஊதிய குறை தீர்க்கும் குழுவின் ஆய்வு வரம்புகள் வெளியீடு. - kalviseithi

Dec 19, 2019

புதிய ஊதிய குறை தீர்க்கும் குழுவின் ஆய்வு வரம்புகள் வெளியீடு.


ஊதிய குறை தீர்க்கும் குழுவின் ஆய்வு வரம்புகள் பின்வருமாறு : 

அ ) ஒரு நபர் குழு , 2010 - இன் பரிந்துரைகளின் அடிப்படையிலும் , அரசாணை ( நிலை ) எண் . 71 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 26 . 02 . 2011 மற்றும் அரசாணை ( நிலை ) எண் . 242 , நிதி ( அதிய பாவு ) துறை , நாள் 22 . 07 . 2013 ஆகியவற்றில் ஆணையிடப்பட்ட ஊதியக் கட்டமைப்பில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக பணியாளர் சங்கங்கள் / தனிநபர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஊதிய குறை தீர்க்கும் குழு ஆராய்ந்திடவும் ;

ஆ ) அரசாணை ( நிலை ) எண் . 71 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 26 . 02 . 2011 , முந்தைய ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் அறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணை ( நிலை ) எண் . 242 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 22 . 07 . 2013 - யை மறு ஆய்வு செய்திடவும் ;

இ ) ஊதிய குறை தீர்க்கும் குழுவானது இந்நேர்வில் கருதப்படும் மனுக்கள் / முரண்பாடுகளின் மீது தனது குறிப்பிட்ட பரிந்துரையினை அரசிற்கு வழங்கிடவும்

ஈ ) ஊதிய குறை தீர்க்கும் குழுவானது தனது அறிக்கையினை நான்கு மாத காலங்களுக்குள் அரசிற்கு சமர்ப்பிக்கும்.

அரசாணை ( நிலை ) எண் . 71 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 26 . 02 . 2011 மற்றும் ஊதிய குறை தீர்க்கும் குழு , 2013 - ன் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணை ( நிலை ) எண் . 242 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 22 . 07 . 2013 ஆகிய ஆணைகளில் ஊதிய திருத்தம் செய்யப்பட்டதால் பாதிப்புக்குள்ளான தனிப்பட்ட பணியாளர்கள் / பணியாளர் சங்கங்கள் தங்களது முறையீட்டு மனுவினை 03 . 01 . 2020 - க்குள் தலைவர் , ஊதிய குறை தீர்க்கும் குழு , தரை தளம் , அரசு தகவல் தொகுப்பு விவர மைய வளாகம் , காந்தி மண்டபம் சாலை , கோட்டூர்புரம் , சென்னை - 600 025 என்ற முகவரிக்கு தங்களது முழு விலாசத்தினை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் .

03 . 01 . 2020 - க்கு பிறகு கிடைக்கப்பெறும் மனுக்கள் பரிசீலிக்கப்படமாட்டாது . நேரடி கேட்பிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் .

4 comments:

  1. Part time teachers Life la yedhachum help panuga

    ReplyDelete
  2. 20வருட பணி முடித்து சிறப்பு நிலை பெற்று ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை ஆக பதவி உயர்வு பெற்று பின்னர் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற்ற ஒருவர் ஒரே நாளில் பணி ஏற்ற இடைநிலை ஆசிரியர் மற்றும் ஓர் ஆண்டின் பின் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் இருவரையும் விட குறைவான அடிப்படை ஊதியம் பெறக் காரணம் தெரிந்து கொள்ள இயலுமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி