தமிழகத்தில் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2019

தமிழகத்தில் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்!!

 
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட அரசுப் பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். ஏற்கெனவே இந்தியாவில் 1094 கேந்திர வித்யாலய பள்ளிகளும், வெளிநாடுகளில் மூன்று பள்ளிகளும் அமைந்துள்ளன.
IMG_ORG_1576236663985 
 
இந்தப் பள்ளிகள் அனைத்தும் மத்திய அரசுப் பாடத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. பொதுவான பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படுவதால் வேறு பள்ளிகளுக்கு மாறினாலும் குழந்தைகளின் கல்வித் தரம் இதனால் பாதிப்படைவது இல்லை.
IMG_ORG_1576236672434

நாடு முழுவதும் 50 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை நிறுவப் போவதாக 2019 ஆம் ஆண்டு மார்ச் 7 ம் தேதி அரசாணை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இந்த 50 பள்ளிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் அமைக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் அமைய உள்ள 4 பள்ளிகளில் கோவை , மதுரை , சிவகங்கை ,திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைய உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

3 comments:

  1. அனைத்து மாவட்டங்களிலும் துவங்கலாம்.

    ReplyDelete
  2. அது எப்படிங்கையா
    மத்திய அரசின் மானசீகமான சீடனாகவே மாறி
    புதிய என்ற பெயரில் ஒரே ஹிந்தி,சமஸ்கிருத திணிப்பு கொண்ட கல்விக்கொள்கையைக் கொண்டு வருவதற்கு இணைக்கமாக
    தமிழ் வழியில் கற்பிக்கப் படும் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று காரணம் காட்டி மூடிக்கொண்டு வருகிறது தமிழக அரசு.. .
    மூடப்பட்டக்கூடிய நிலையில் உள்ள 400க்கும் மேற்பட்ட தாய்மொழிக்கல்வியைபோதிக்கும் அரசுப்பள்ளிகளில் மாணவர்ளின் எண்ணிக்கை யை அதிகரிக்கும் வழிகளை பின்பற்றி மேன்படுத்திக்கொண்டே கேந்திர வித்தியாலயாவையும் கொண்டுவந்தால் உண்மையிலேயே ஊமிழககல்வித்துறையை சிறிதேனும் வளர்ச்சி பாதையில் செல்ல உதவிய செயல்க இருக்கும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி