300 மாணவர்களுக்கு குறையாமல் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்: அறிக்கை தர பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2019

300 மாணவர்களுக்கு குறையாமல் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்: அறிக்கை தர பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!!


உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த பரிந்துரை அறிக்கையை, ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதையடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர், அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்மைப்பு வசதிகள் தொடர்பான அறிக்கை தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.




இதுதொடர்பாக இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுவதும் 300 மாணவர்களுக்கு குறையாமல் உள்ள அரசு உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில்  தேவைப்படும் மாணவ, மாணவியருக்கான கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி, கூடுதலாக தேவைப்படும் வகுப்பறை வசதிகள் பள்ளிகளுக்கான சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விரிவான பரிந்துரை அறிக்கையை தயார் செய்து ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பரிந்துரையில் தெரிவிக்கப்படும் திட்டங்கள் நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படும்.அதனால் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பெயர்களை இதில் பரிந்துரை செய்யக்கூடாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி