பயிற்சி வகுப்பிற்கு வராத வாக்குப்பதிவு அலுவலர்கள் , ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!! - kalviseithi

Dec 18, 2019

பயிற்சி வகுப்பிற்கு வராத வாக்குப்பதிவு அலுவலர்கள் , ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!!


பத்திரிக்கை செய்தி

 உள்ளாட்சி தேர்தல் - 2019 தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வராத வாக்குப்பதிவு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் , வட்டார ஊராட்சி உறுப்பினர்கள் , சிற்றுராட்சி உறுப்பினர்கள் மற்றும் சிற்றுராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது .

 மேற்காணும் தேர்தலுக்காக 13595 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு 15 . 12 . 2019 அன்று முதற் கட்ட பயிற்சி நடைபெற்றது . இந்த பயிற்சியில் 694 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ளாதது தெரிய வந்துள்ளது .

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வருகை தராத 694 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மீது தேர்தல் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது . இதன் அடிப்படையில் தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவனா மற்றும் மாவட்ட ஆட்சியர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி