பொதுத்தேர்வுக்கு தயாராகும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஐஐடி பேராசிரியர்களின் வீடியோ!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2019

பொதுத்தேர்வுக்கு தயாராகும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஐஐடி பேராசிரியர்களின் வீடியோ!!

பிளஸ் 1  மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு உதவும் வகையில் ஐஐடி பேராசிரியர்கள் பாடங்கள் வாரியான கற்றல் வீடியோ ஒன்றை யுடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர்.

 ஐஐடியைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் இந்த கற்றல் வீடியோ விரிவுரைகளுக்காக தங்களது கல்வி பங்களிப்பை மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கான முழு முயற்சியையும் எம்எச்ஆர்டி.யின் நிதியுடன் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி ஐஐடி இயற்பியல் துறையைச் சேர்ந்த பேராசிரியருமான ரவி சோனி ஒருங்கிணைத்துள்ளார்.

இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் 600 மணி நேர விரிவான கற்றல் வீடியோ யுடியூப் சேனலில் மாணவர்களுக்கு கிடைக்கின்றன.

இதுகுறித்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரிவிக்கவும். 

உயிரியல் பாடங்களுக்கான கற்றல் வீடியோவை காண சேனல் 19



வேதியியல் உயிரியல் பாடங்களுக்கான கற்றல் வீடியோவை காண சேனல் 


கணிதம் உயிரியல் பாடங்களுக்கான கற்றல் வீடியோவை காண சேனல் 


இயற்பியல் உயிரியல் பாடங்களுக்கான கற்றல் வீடியோவை காண சேனல் 



இந்த கற்றல் வீடியோக்களை தூர்தர்ஷன் ஃப்ரீடிஷ் டிடிஎச் சேனல் 19, 20, 21 மற்றும் 22 இல் முழுமையான பட்டியல் கிடைக்கிறது.

படித்ததை படிப்பவர்களோடு பகிர்ந்துகொள்வது நல்ல பண்பு. தாங்கள் பார்த்து அறிந்த நல்ல கல்வி தகவல்களை தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த தகவலையும் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி