மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2019

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பா?


தமிழகத்தில் 410 தொடக்கப்பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்து இருக்கிறது.

தமிழகம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று சமீபத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பில், மாநிலம் முழுவதும் 410 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 5-க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.மேலும் 1,531 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளதும் கணக்கெடுப்பில் தெரியவந்து இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பது பற்றி தொடக்கக்கல்வி இயக்ககம் ஆலோசித்து வருகிறது.

அடுத்த கல்வியாண்டில் (2020-21) இருந்து இந்த பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைப்பது அல்லது தற்காலிகமாக மூடுவது குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கும் போது, பழைய பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாககல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

  1. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் எண்ணிக்கை கூட்ட
    சரியான கட்டமைப்பு வசதிகள் ஆன
    குடிநீர்,
    கழிப்பறை வசதி,
    மைதானம்,
    பாதுகாப்பானசுற்றுச்சுவர்,
    நூலகவசதி போன்றவற்றுடன் முக்கிய ஒன்றான
    கணினி வசதிகள் கொண்ட ஆய்வகம் போன்ற முக்கியமான வசதிகள் இன்னும்
    என்ன என்ன செய்யலாம் என்று காமராஜரைப்போல யோசித்து செயல்படுவதை விட்டு,
    தமிழக கல்வித்துறையையும்,தரத்தையும்
    உத்திரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களுக்கு இணையாகவும், மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு ஒத்து ஊதுவது போலவும்,நடந்து கொள்வது,
    தமிழகத்தை சுதந்திரத்திற்கு முந்தைய குலத்தொழிலுக்கு கொண்டுசெல்லும் என்பதையும் மனசாட்சியோடு யோசித்து செயல்படவும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி