அதிரடியாக ஏறிப்போச்சு கட்டணம்.. ஜியோ.. வோடஃபோன்.. ஏர்டெல்.. இதில் இப்ப இது பெஸ்ட் சாய்ஸ்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2019

அதிரடியாக ஏறிப்போச்சு கட்டணம்.. ஜியோ.. வோடஃபோன்.. ஏர்டெல்.. இதில் இப்ப இது பெஸ்ட் சாய்ஸ்?


நேற்று முதல் ஜியோவின் விலையேற்றங்கள் அமலுக்கு வந்துள்ளது.

ஏற்கனவே ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் விலையை ஏற்றிவிட்டதால் தற்போது எந்த நெட்வொர்க்கின் திட்டங்கள் சிறந்ததாக இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கடந்த டிசம்பர் 3ம் தேதி அதிரடியாக 42 சதவீதம் வரை விலையை உயர்த்தின. இதன்படி வோடஃபோன் - ஐடியா சேவைகளின் விலை பட்டியலை பார்த்தால் ஒரு மாதத்திற்கு அதாவது 28 நாட்களுக்கு விலை 249 ரூபாய். தினமும் 1.5 டேட்டாவும் 100 SMS-களும் 28 நாள்களுக்குக்கு கிடைக்கும். அழைப்புகள் இலவசம் (வோடஃபோன் டு வோடஃபோன்).ஏர்டெல் இதே பேக்கை 248 ரூபாய்க்கு வழங்குகிறது.

ஜியோ நிறுவனம் இதே பேக்கை 199 ரூபாய்க்கு வழங்குகிறது. அதாவது தினமும் 1.5 டேட்டாவும் 100 SMS-களும் 28 நாள்களுக்கு கிடைக்கும். 149 ரூபாய் என்ற இருந்த பேக்கை 199 ஆக உயர்த்தி உள்ளது.

மூன்று மாத திட்டங்களையே (84 நாட்கள் தான்) பலரும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதால் அந்த திட்டத்தை பார்த்தால் ஜியோ நிறுவனம் 1.5 ஜிபி பிளானை 555 ரூபாய் ஆக உயர்த்தி உள்ளது. ஏர்டெல் 598 ரூபாயாகவும், வோடபோன் 599 ரூபாய் ஆக உயர்த்தி உள்ளன.

84 நாட்களுக்கான 2 ஜிபி திட்டங்களை பார்த்தால், ஜியோ 599 ரூபாய்க்கும், ஏர்டெல் 698 ரூபாய்க்கும், வேடாபோன் 699 ரூபாய்க்கு வழங்குகிறது. அதாவது ஜியோவில் மட்டும் 100 ரூபாய் குறைவாக இருக்கிறது.

எனவே ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஜியோ தான் சிறந்ததாக தெரிகிறது.

4 comments:

  1. இல்லை. BSNLதான் சிறந்தது.

    ReplyDelete
  2. Bsnl data details yyyyy tharavillai.....???

    ReplyDelete
  3. I'm going to change my number from Airtel to BSNL. இனியாவது திருத்திக்கொள்கிறேன். தனியாரிடம் மாட்டிக்ெெகாண்டால் இது தான் நிலைமை ..அது கல்வி, மருத்துவம்,ோக்குவரத்து என அனைத்துக்கும் ெ ருந்தும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி