பி.எட்., கல்லுாரிகளுக்கு வாட்ஸ் ஆப் குழு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2019

பி.எட்., கல்லுாரிகளுக்கு வாட்ஸ் ஆப் குழு!!


பி.எட்., கல்லுாரிகளுக்கு என, தனி, வாட்ஸ் ஆப் குரூப் துவங்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 700 பி.எட்., மற்றும் எம்.எட்., கல்லுாரிகள் இயங்குகின்றன. இந்த கல்லுாரிகளின் பாடத்திட்டம், தேர்வு, வகுப்பு அட்டவணை உள்ளிட்ட அனைத்து பணிகளையும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை மேற்கொள்கிறது.

இந்நிலையில், இக்கல்லுாரிகளுக்கு, பல்கலையால் அனுப்பப்படும் சுற்றறிக்கைகள், தகவல்கள், உரிய நிர்வாகிகளிடம் சரியாக சேர்வதில்லை என்று, புகார்கள் வந்தன.

இதையடுத்து, பி.எட்., கல்லுாரிகளின் நிர்வாகிகளுக்கு என, வாட்ஸ் ஆப் குழு அமைத்து, தகவல்களை அனுப்ப, ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது. இதற்காக, அனைத்து பி.எட்., கல்லுாரிகளும், தங்கள் நிர்வாகிகளின், வாட்ஸ் ஆப் மொபைல் போன் எண்களை, பல்கலையில் பதிவு செய்யுமாறு, பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி