TET தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்கள் பணி நீக்கம்? காலியாகக்கூடிய பணியிடங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை முடித்தவர்கள் பணி நியமனம்? தினகரன் நாளிதழ் செய்தி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2019

TET தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்கள் பணி நீக்கம்? காலியாகக்கூடிய பணியிடங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை முடித்தவர்கள் பணி நியமனம்? தினகரன் நாளிதழ் செய்தி!


தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்களாக பணியாற்ற கூடியவர்கள் ஆசிரியர்  தகுதித் தேர்வினை முடிக்க வேண்டும் என்பது விதியாகும். அதன் அடிப்படையில் அரசு பள்ளிகளை பொறுத்தவரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமனம்  செய்யப்படுகிறார்கள்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் இதுவரை 1747 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வினை முடிக்கவில்லை. தமிழக அரசு அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்ட விதிகளை அமல்படுத்திய 2011-ம் ஆண்டு முதல் அடுத்த 5 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித்  தேர்வினை முடிக்க வேண்டுமென்று அரசு உத்தரவிட்டிருந்தது. நான்கு முறை தமிழகத்தில் டெட் தேர்வு நடத்தப்பட்டு தேர்வில் தகுதி பெற வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் 1747 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அனைவருக்கும்  கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இவர்கள் ஆசிரியர்களாக பணியாற்ற முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.

போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படும் சூழ்நிலை இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும்  ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1747 பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் காலியாகக்கூடிய பணியிடங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை முடித்தவர்கள்  பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

15 comments:

  1. Hayyo pavam! Avargal vazhkaiyai kedukavendam! Engaluku posting new va podunga....velai kidaithu paripovadhu migakodumai!!!

    ReplyDelete
    Replies
    1. Enna pavam ellarum panam koduthu serthavanga. Entha aided school la panam vangama posting poduran. Tet mudichavan kitaye barum pesuranunga

      Delete
    2. அரசு படித்துவிட்டு திரியும் யாருக்கும் வேலை வழங்கப்போவதில்லை. டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கிவிடக் கூடாது. இவர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வேலை கொடுத்தாலும் 7000 மற்றும் 8000 ரூபாய் சம்பளத்தில் கொடுக்க வேண்டும். இன்னும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி அனைத்து பணியிடங்களும் குறைக்கப்பட்டு வேலைவாய்ப்பே வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. படித்தவர்கள் எங்கே செல்வது? தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்னதான் வழி? தனியார் பள்ளிகளிலும் உரிய வாய்ப்பும் கிடையாது? அப்புறம் எதற்கு தகுதித் தேர்வு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்? 2013 -ல் தேர்ச்சிபெற்று தற்போது அது ஏழாண்டுகளில் காலாவதி ஆகப் போகிறது. இதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன பிரயோஜனம்? இப்படி உள்ள சூழ்நிலையில் இப்போது பணிபுரிந்து கொண்டிருப்போரின் வயிற்றில் அடிப்பதும் பாவமே! படித்தவர்கள் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே பி.எட் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் அதிகமாகத் திறக்கப்பட்டு கல்லூரிகளை நடத்தியவர்கள் நன்றாக இருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பு என்பதையே இல்லாமல் செய்து கொண்டிருக்கும் நிலையை மாற்றவும் அரசு முன்வரவேண்டும். நிறைய ஏழைக்குடும்பங்கள் இப்படி அரசு வேலைவாய்ப்பு மூலம் தான் நடுத்தர நிலைக்கு உயர்கிறார்கள். இப்படி வேலைவாய்ப்பு என்பது மறுக்கப்பட்டால் இன்னும் கீழ்நிலைக்குத் தான் செல்ல வேண்டும். தயவு செய்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வாழ்வளியுங்கள். அனைத்து பணியிடங்களையும் நிரப்புங்கள். அதை குறைத்து விடாதீர்கள் என்பதை கோரிக்கையாக வைக்கின்றோம். செவிசாய்க்குமா அரசு???????????????????

      Delete
  2. Venam sir nanga innum wait pandrom avangaloda life ketuka venam .rempa kastam velai la irunthutu salary vangitu irunthavanga la neeka vendam......

    ReplyDelete
    Replies
    1. Apadinaaa Tet pass panna engalukkum posting podunga. Pass pannamale avanga work pannalam. Pass pannittu nanga yeen wait pannanum

      Delete
    2. Mudhevi aduthava polapula manna potu apadi oru job thevaya unaku ipo ne tet la pass panitu posting pora next year vera rules vera exam konduvandhu ne eligible illa nu soina veliya poiruviya velakkena kandipa gov avagaluku yedhachum oru option kuduga yegaluku posting poduga idha neyamana oonu

      Delete
    3. Visarichu paru avanunga ellam kasu koduthutu vayithula neruppa kattitu irukkanunga. Unmaya padichi tet pass pannavanga job illama irukkanga

      Delete
  3. Avangala pani neekurenu pudusa kasu pakkanum pakkura unga.உசார்

    ReplyDelete
  4. அரசு வாய்ப்பு கொடுத்தும் தேர்ச்சி பெறவில்லை என்றால் என்ன செய்ய

    ReplyDelete
  5. Sir vendam work pantravakalay irukattum

    ReplyDelete
  6. Part time teachers salary koodudhu pass pannina piragu full salary koodudha correct

    ReplyDelete
  7. We are waiting 7 years please will give posting

    ReplyDelete
  8. Aided school panam ellama vela kidakathu

    ReplyDelete
  9. அரசு எது செய்தாலும் துணிந்து செய்.
    1747 குடும்பம் வாழும்.1747 குடும்பம் வாழ்வை இழக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி