TET - தகுதி தேர்வு முடிக்காத 1,747 ஆசிரியர்கள் யார்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2019

TET - தகுதி தேர்வு முடிக்காத 1,747 ஆசிரியர்கள் யார்?


ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத, 1,747 ஆசிரியர்களின் பட்டியலை, இன்று தாக்கல் செய்ய, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ஆசிரியர் பணியில் சேர்வதற்கு, மாநில அல்லது மத்திய அரசுநடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற, 2016 நவம்பர் வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிறகும், பல முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பணியாற்றும், 1,747 பேர், தகுதி தேர்வை முடிக்கவில்லை என, பள்ளிக் கல்வித் துறை கண்டுபிடித்தது. அவர்களின் பெயர் பட்டியலை, இன்று தாக்கல் செய்யும்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இந்த நடவடிக்கைக்கு, ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஆசிரியர்களின் பணிக்கு பாதிப்பில்லாத வகையில், அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, பணியை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட், தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 comments:

  1. அரசு படித்துவிட்டு திரியும் யாருக்கும் வேலை வழங்கப்போவதில்லை. டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கிவிடக் கூடாது. இவர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வேலை கொடுத்தாலும் 7000 மற்றும் 8000 ரூபாய் சம்பளத்தில் கொடுக்க வேண்டும். இன்னும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி அனைத்து பணியிடங்களும் குறைக்கப்பட்டு வேலைவாய்ப்பே வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. படித்தவர்கள் எங்கே செல்வது? தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்னதான் வழி? தனியார் பள்ளிகளிலும் உரிய வாய்ப்பும் கிடையாது? அப்புறம் எதற்கு தகுதித் தேர்வு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்? 2013 -ல் தேர்ச்சிபெற்று தற்போது அது ஏழாண்டுகளில் காலாவதி ஆகப் போகிறது. இதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன பிரயோஜனம்? இப்படி உள்ள சூழ்நிலையில் இப்போது பணிபுரிந்து கொண்டிருப்போரின் வயிற்றில் அடிப்பதும் பாவமே! படித்தவர்கள் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே பி.எட் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் அதிகமாகத் திறக்கப்பட்டு கல்லூரிகளை நடத்தியவர்கள் நன்றாக இருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பு என்பதையே இல்லாமல் செய்து கொண்டிருக்கும் நிலையை மாற்றவும் அரசு முன்வரவேண்டும். நிறைய ஏழைக்குடும்பங்கள் இப்படி அரசு வேலைவாய்ப்பு மூலம் தான் நடுத்தர நிலைக்கு உயர்கிறார்கள். இப்படி வேலைவாய்ப்பு என்பது மறுக்கப்பட்டால் இன்னும் கீழ்நிலைக்குத் தான் செல்ல வேண்டும். தயவு செய்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வாழ்வளியுங்கள். அனைத்து பணியிடங்களையும் நிரப்புங்கள். அதை குறைத்து விடாதீர்கள் என்பதை கோரிக்கையாக வைக்கின்றோம். செவிசாய்க்குமா அரசு???????????????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி