நாளை காலை 9 மணியளவில் குடியரசு தினக் கொண்டாட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் சிறப்போடு கொண்டாட தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள் - Proceedings! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2020

நாளை காலை 9 மணியளவில் குடியரசு தினக் கொண்டாட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் சிறப்போடு கொண்டாட தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள் - Proceedings!


ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் ஜனவரி 26 - ம் நாள் கொண்டாப்படுவது போல் 2020ஆம் ஆண்டும் ஜனவரி 26ஆம் நாள் ஞாயிறு அன்று காலை 09 . 00 மணியளவில் குடியரசு தினக் கொண்டாட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் சீரோடும் , சிறப்போடும் அனைத்து அரசுப் பணியாளர்களும் கொண்டாடுதல் வேண்டும் .

மேலும் , தேசியக் கொடியினை காட்சிப்படுத்தும் போதும் , பயன்படுத்தும் போதும் நெகிழித் தாள்கள் ( PLASTICS ) உள்ள கொடிகளை பயன்படுத்தக் கூடாது எனவும் , தேசியக் கொடிகளை பயன்படுத்துவது குறித்து பிரிவு IX of flag code of india 2002 - ன் படி செயல்பட்டு எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு நன்முறையில் கொண்டாட தலைமையாசிரியர்கள் கேட்டுக் மேலும் , தோள்கள் ( PLASTIC ) ஆத்துவது குறித்து பிரிவு " இடம் கொடுக்காமல் கொள்ள நமது இந்தியாவின் எதிர்காலம் இளைஞாகளின் கையில் உள்ளது . மேலும் இன்றைய மாணவர்கள் நாளைய இந்திய பெருநாட்டின் இளைஞர்களாய் வீற்றிருந்து வழிநடத்திச் செல்லும் கடமையும் பொறுப்பும் உள்ளதால் , வருங்கால சிறந்த இந்திய குடிமக்களை உருவாக்கும் கூடங்களாக செயல்படும் நம் பள்ளிகளில் நமது இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றையும் சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களையும் பட்ட இன்னல்களையும் தேசியக்கொடி வரலாற்றையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து உணர்வுப்பூர்வமாகவும் மகிழ்ச்சியும் எழுச்சியும் மிக்க விழாவாகவும் கொண்டாடப்பட வேண்டும் .

 குடியரசு தினத்தன்று பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்களாலும் , வண்ண மலர்களாலும் அலங்கரிக்க வேண்டும் . 26 . 01 . 2020 அன்றைய தினம் காலை தேசியக்கொடியினை பள்ளி வளாகத்தில் ஏற்றி மிக சிறப்பாக மேற்கூறப்பட்டவாறும் , நாட்டுப்பற்று , பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை விளக்கும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் . . சுதந்திர போராட்ட வரலாற்றினை விளக்கும் வகையில் கண்காட்சி , நாடகம் போன்றவை நடத்தப்பட வேண்டும் . பள்ளிகளில் நாட்டுப்பற்றையும் , தேசிய ஒருமைப்பாட்டையும் விளக்கும் வண்ணம் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி , ஓவியப்போட்டி மற்றும் விளையாட்டுப்போட்டி ஆகியவைகள் நடத்தப்பட்டு வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு குடியரசு தினவிழா அன்று பரிசுகள் வழங்கப்பட வேண்டும் .

நமது குடியரசு தினவிழா கொண்டாட்டத்தினை நினைவுகூறும் வகையில் பள்ளிகளில் மரக்கன்றுகளை நடுவதற்கு இடங்களை தேர்வு செய்து , போதிய இடவசதி இருப்பின் மரக்கன்றுகளை மாணவர்களைக் கொண்டு நடச்செய்து பராமரிக்கச் செய்யலாம்.

 இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றினை மாணவ மாணவிகள் அறியும் வகையில் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களால் சொற்பொழிவு நடத்தப்பட வேண்டும் . குடியரசு தின நிகழ்ச்சிகளில் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் , அலுவலப் பணியாளர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் . குடியரசு தின நிகழ்ச்சிகளில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ - மாணவியர்களும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் . . பள்ளி வளர்ச்சியில் அக்கறையுள்ள முன்னாள் மாணவர்கள் இன்னாள் மாணவர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்கள் , அன்னையர் குழுக்கள் , பள்ளிப் புரவலர்கள் , சுதந்திர தின போராட்ட வீரர்கள் , அனைத்து சமுதாய பிரிவினர்கள் , மற்றும் மாண்புமிகு சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களை அழைத்து விழாவில் பங்கு பெறச் செய்ய வேண்டும் .

* தேசியக்கொடியின் மாண்பையும் , தேசிய கீதத்தின் மதிப்பையும் மாணாக்கர்களுக்கு எடுத்துரைத்து அதனை போற்றி பாதுகாக்கும் மாண்பினை ஊட்ட வேண்டும் . தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை அனைத்து மாணவ மாணவியர்களும் சேர்ந்து பாடவேண்டும் .

மேலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடுவது குறித்து குழு அமைத்து மாணவர்கள் மத்தியிலே நாட்டுப்பற்றையும் , தேசிய ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்கும் வண்ணம் சிறப்பாக கொண்டாடி , குடியரசு தினம் கொண்டாடப்பட்ட விதத்தினை அறிக்கையாக தயார் செய்து குறைந்த பட்சம் ஒரு புகைப்படத்துடன் இணைத்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் 27 . 01 . 2020 அன்று ஒப்படைக்க வேண்டும் .
      - CEO,  நாகப்பட்டினம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி