AEBAS - தொட்டுணர் கருவி முறையிலான வருகை பதிவேடு முறையில் வருகைப்பதிவு செய்யப்படாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2020

AEBAS - தொட்டுணர் கருவி முறையிலான வருகை பதிவேடு முறையில் வருகைப்பதிவு செய்யப்படாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.


அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை ( AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System ) அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் 22.01.2020 அன்று ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகை பதிவேடு முறையில் வருகைப்பதிவு செய்யப்படாத சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . வருகை பதிவு செய்யப்படாததற்கான விளக்கத்தினை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களின் தலைமை அலுவலர்கள் உரிய விளக்கத்தினை 28.01.2020 மாலை 04.00 மணிக்குள் இவ்வியக்ககத்திற்கு சமர்ப்பிக்குமாறும் , மேலும் முறையாக தினந்தோறும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் தொட்டுணர் கருவி முறையில் வருகை பதிவு செய்யப்பட்டுவருகிறதா என்பதை இணையதள வாயிலாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது .

இனிவரும் காலங்களில் இம்மாதியான நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க சார்நிலை அலுவலர்களான மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது . மேலும் , தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவு சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் தினந்தோறும் பதிவுசெய்யப்படவேண்டும் . அவ்வாறு வருகை பதிவுசெய்யப்படாத அலுவலகங்கள் மற்றம் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கலாகிறது .


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி