10,11 ஆம் வகுப்பு - புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட PTA மாதிரி வினாத்தாள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2020

10,11 ஆம் வகுப்பு - புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட PTA மாதிரி வினாத்தாள் வெளியீடு.10, 12ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள் மற்றும்  தீர்வு புத்தகங்களை தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த புத்தகங்கள் தமிழகத்தில் 32 இடங்களில் விநியோகம் செய்யப்பட உள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் புதிதாக பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், புதிய பாடப்புத்தகங்கள் அச்சிட்டு பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பாடப்புத்தகங்களை மாணவர்கள் எளிதாக புரிந்து கொண்டு பொதுத்தேர்வுக்கு தயாராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் மற்றும் தீர்வு புத்தகங்களை மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

இதில் குறிப்பாக 12ம் வகுப்பு கணித பாடத்துக்கான தீர்வு புத்தகமும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி மாதிரி வினாத்தாள் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணக்கு பாடத்துக்கு தீர்வுப் புத்தகம் தமிழ், ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை சுமார் 32 ஊர்களில் விற்பனை செய்ய மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனை போலவே 12ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் தலா 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

4 comments:

 1. Sir அந்த புக் எங்க கிடைக்கும்

  ReplyDelete
 2. 10th maths solution book kidaikuma

  ReplyDelete
 3. Sir. Antha book enga kidaikkum nu therinja konjam sollunga sir

  ReplyDelete
 4. 10த் pta book எங்கே கிடைக்கும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி