10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி ? தேர்வு துறை அலுவலர்கள் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2020

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி ? தேர்வு துறை அலுவலர்கள் விளக்கம்.


அரையாண்டு தேர்வு வினாத்தாள் போல , பொதுத்தேர்வு வினாத்தாள் அமைக்கப்படும் ' என , அரசு தேர்வுத்துறை அலுவலர்கள் தெரி வித்துள்ளனர் . தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் , ஐந்து , எட்டு , 10 , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு , பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது . இந்த தேர்வு களை , அரசு தேர்வுத்துறை நடத்த உள்ளது . நடப்பு கல்வி ஆண்டில் , பொது தேர்வுக்கான வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை , இது வரை அரசு தேர்வுத்துறை அறிவிக்கவில்லை . இந்த குழப்பம் காரணமாக , அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் அமைப்பினர் , தேர்வுத்துறை அலு வலகம் சென்று , தேர்வுத்துறை அலுவலர்கள் , உஷாராணி மற்றும் அமுதவல்லி ஆகியோரிடம் முறையிட்டனர் . | அப்போது , தேர்வுத்துறை அலுவலர்கள் கூறி யதாவது : | பொதுத்தேர்வை பொறுத்தவரை , அரை யாண்டு தேர்வில் , எந்த மாதிரியான வினாத் தாள் இடம் பெற்றதோ , அந்த மாதிரியிலேயே , பொதுத் தேர்வு வினாத்தாள் இருக்கும் . எனவே , பிற வகை மாதிரி வினாத்தாள்களை பொருட்ப டுத்த வேண்டாம் . பள்ளி கல்வி துறையின் , பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாதிரி வினாத்தாளையும் , பொருட்ப டுத்த வேண்டாம் . அதை , மாணவர்களிடம் தெரி வித்து விடுங்கள் . இவ்வாறு , அவர்கள் கூறினர் .

5 comments:

  1. குழப்பம் தீர்ந்தது.... நன்றி

    ReplyDelete
  2. 8th ku full portion or only third term ???
    Because govtcollect 1and 2term books

    ReplyDelete
  3. இந்தக் குழுவில் அன்நெளன் என்ற பெயரில் பதிவிடுவதை முதலில் நிறுத்தவும்

    ReplyDelete
  4. I dont Know the method of save name sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி