11th Commerce Slow Learners High Score Instructions! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2020

11th Commerce Slow Learners High Score Instructions!



- இந்த கருத்துகள் அனைத்தும் நமது பாடப் புத்தக வினாக்கள் பகுப்பாய்வு , அரசு பொதுத் தேர்வு வினாத்தாள் ( மார்ச் 2019 & ஜீன் 2019 ) அடிப்படையில் தயாரிக்கப்பட்டது .

- மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க நாம் முக்கியமான கேள்விகளை படிக்க வைத்து அதிலிருந்து வினாத்தாளில் கேள்விகள் கேட்கப் படவில்லை என்று கவலைப் படுவதை விட சில குறிப்பிட்ட அலகுகளை நாம் தெளிவாக படிக்க வைத்தால் வெற்றி உறுதி முதலில் பாடப் புத்தக ( BOOK BACK ) 1 மதிப்பெண் வினாக்கள் 176 - யை படிக்க வைத்து தயார் செய்யப்பட வேண்டும் . இதிலிருந்து குறைந்த பட்சம் 10 முதல் 13 கேள்விகள் இடம் பெறும் . ஆகவே இதில் குறைந்த பட்சம் 10 மதிப்பெண் உறுதி .

அடுத்ததாக 2 மதிப்பெண் , 3 மதிப்பெண் , மற்றும் 5 மதிப்பெண் வினாக்களை படிக்க வைக்க சில முக்கியமான அலகுகளான , அலகு 1 , 4 , 7 மற்றும் 10 தேர்வு செய்து அதை திரும்ப திரும்ப படிக்க வைக்க வேண்டும் . நாம் இந்த அலகுகளை தேர்ந்தெடுக்க காரணம் குறைந்த கேள்விகள் உள்ள அலகு மற்றும் படிப்பதற்கு எளிமையான அலகு என்பதே . தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அலகுகளிலிருந்து , 2 மதிப்பெண் வினாக்கள் 2 முதல் 3 வினாக்களும் , 3 மதிப்பெண் வினாக்கள் 3 முதல் 6 வினாக்களும் , 5 மதிப்பெண் வினாக்கள் 3 முதல் 4 வினாக்களும் , 11ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 2019 & ஜீலை 2019 வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ளது .

 இந்த பகுப்பாய்வின் அடிப்படையில் 2 மதிப்பெண் வினாக்கள் குறைந்தது இரண்டும் , 3 மதிப்பெண் வினாக்கள் குறைந்தது மூன்றும் , 5 மதிப்பெண் வினாக்கள் குறைந்தது மூன்றும் கேட்கப்பட்டுள்ளது . ஆகவே குறைந்த பட்சம் 30 முதல் 45 மதிப்பெண் இடம் பெற்றுள்ளது . ஆகவே நாம் தேர்ந்தெடுத்த 4 அலகுகளில் குறைந்தபட்சம் 30 மதிப்பெண் உறுதி .

இதன் மூலம் 1 மதிப்பெண் வினாக்களிலிருந்து 10 மதிப்பெண்களும் , மற்ற 2 , 3 , 5 மதிப்பெண் வினாக்களிலிருந்து 30 மதிப்பெண்களும் கண்டிப்பாக கிடைக்கும் . ஆகவே நமக்கு குறைந்த பட்சம் 40 மதிப்பெண் கிடைப்பது உறுதி . நாம் எடுத்து கொண்ட கணக்கிற்கு மேல் கண்டிப்பாக வினாத்தாள் அமையுமே தவிர 40 மதிப்பெண்களுக்கு குறைய வாய்ப்பில்லை .

நாம் எடுத்துக் கொண்ட கணக்குகள் பகுப்பாய்வை விட குறைவே . ஆகவே மேற்கூறிய அலகுகளை திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி