பிப்.15க்கு பின் செய்முறை தேர்வு நடத்தலாம் - மாநில தலைவர் இளங்கோவன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2020

பிப்.15க்கு பின் செய்முறை தேர்வு நடத்தலாம் - மாநில தலைவர் இளங்கோவன்


‛பிளஸ் 1, 2 மாணவர்களின் நலன் கருதி, செய்முறை தேர்வினை அரசு பிப்.,15 க்கு பின்னர் நடத்த வேண்டும்,'' என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது,பிளஸ் 1, 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்.,3 முதல் தொடங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. இக்கல்வி ஆண்டில் தொடர் மழை, அரையாண்டு தேர்வு விடுமுறைமற்றும் உள்ளாட்சி தேர்தல், ஓட்டு எண்ணும் பணி என பல நாட்கள் விடுமுறை விடப்பட்டது.ஜன.,6 ல் பள்ளி திறந்ததும் மாணவர்கள் சிறப்பு தேர்வை சந்தித்தனர். பொங்கல் விடுமுறைக்கு பின்னர் தான் 2 வது சிறப்பு திருப்புதல் தேர்வை சந்தித்தனர். இச்சூழலில், பிப்.,3 முதல் செய்முறை தேர்வு அறிவித்துள்ளது.இதை மாற்றி தமிழக கல்வித்துறை இத் தேர்வை பிப்.,15 முதல் 27 வரை நடத்த உத்தரவிட வேண்டும். செய்முறை தேர்வு முடிந்ததும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விடும்.

இதை தவிர்த்து, அரசு தேர்வுக்கு தயார் படுத்த செய்முறை தேர்வினை தள்ளிவைத்தால், கிராமப்புற, ஏழை, நடுத்தர குடும்ப மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற ஏதுவாக அமையும். இது குறித்து கல்வித்துறை செயலர், இயக்குனர்களிடம் முறையிட்டுள்ளேன், என்றார்.

5 comments:

  1. +1,+2 மாணவர்களுக்கு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அவர்கள் பொது தேர்வை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இருந்து வருகின்றனர் இத்தகய சூழலில் அவர்களால் சரியாக தேர்வை எப்படி எழுத முடியும்?

    ReplyDelete
  2. vacant a fill pannunthan nallathu nadakkum

    ReplyDelete
  3. vacant a fill pannunthan nallathu nadakkum

    ReplyDelete
  4. After posting, practical nadathikkalam sir

    ReplyDelete
  5. தேவையற்ற கோரிக்கை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி