மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2 ஆயிரம் டாக்டர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் தேர்வ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2020

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2 ஆயிரம் டாக்டர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் தேர்வ


*.மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டில் 2 ஆயிரம் டாக்டர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

*.தமிழக அரசு மருத்துவமனை களில் ஏற்படும் காலி பணியிடங்கள் மற்றும் புதிதாக தோற்று விக்கப்படும் பணியிடங்களை நிரப் புவதற்காக, இந்தியாவில் முதல் முறையாக தமிழக சுகாதாரத் துறைக்கு என கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி)தொடங் கப்பட்டது.

*.இந்த வாரியத்தின் மூலம் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என 30 ஆயிரம் பேர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

*.இந்நிலையில், 2020-ம் ஆண்டு தேர்வுகள் குறித்த அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர் வாணையம்www.mrb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் வெளி யிட்டுள்ளது.

*.அந்த அறிவிப்பில், உதவி டாக்டர்கள் மற்றும் உதவி மருத்துவ அதிகாரி (சித்தா) தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாத மும், உதவி மருத்துவ அதிகாரி (ஓமியோபதி, ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மார்ச் மாதமும் வெளியிடப்படும்.

*.உதவி சிறப்பு டாக்டர் அறிவிப்பு மே மாதமும், லேப் டெக்னீசி யன் கிரேடு-2 அறிவிப்பு ஏப்ரம் மாதமும், இசிஜி டெக்னீசியன் அறிவிப்பு செப்டம்பர் மாதமும், உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் அக்குபேஷனல் தெரப்பிஸ்ட் அறிவிப்பு அக்டோபர் மாதமும், மருந்தாளுநர் அறிவிப்பு நவம்பர் மாதமும் வெளியாகவுள்ளது.

*.அறிவிப்பு வெளியான ஓரிரு மாதங்களில் எழுத்து தேர்வு மற் றும் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு, தேர்வு செய்யப் படுபவர்கள் அரசு மருத்துவமனை களில் பணி நியமனம் செய்யப் படுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

*.இதுதொடர்பாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “2020-ம் ஆண்டில் 2 ஆயிரம்டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள் 3 ஆயிரம் பேர் என மொத்தம் 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்” என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி