தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் வட்டாரக் கல்வி அவைவர்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தது 20 தொடக்க மற்றும் நடுதலைப் பள்ளிகளைப் பார்வையிடவும் 5 பள்ளிகளை ஆண்டாய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
மேலும் வட்டாரக் கல்வி அலுவலகங்களை மாவட்ட கல்வி அவரவர்கள் முன்னறிவிப்பின்றி பார்வையிடவும் ஆண்டாய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
மேலும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலர்களால் தவறாமல் நடத்தப்பட வேண்டும் எனவும் , அறிவுறுத்தப்பட்டுள்ளது .
2 வட்டாரக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரால் வேலுார் , கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு வேலூர் மண்டல அளவில் ஆய்வுக் கூட்டம் 31 .01.2020 அன்று காலை 10 . 00 மணிக்கு வேலூர் மாவட்டம் , சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது . கூட்டத்தில் பார்வையில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட பொருண்மைகள் சார்ந்தும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் சார்ந்தும் ஆய்வு செய்யப்படவுள்ளது . எனவே கூட்டப் பொருள் சார்பான படிவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . -
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி