ஆசிரியர் வைப்பு நிதி கணக்குகள் தணிக்கை தொடர்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2020

ஆசிரியர் வைப்பு நிதி கணக்குகள் தணிக்கை தொடர்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



சென்னை மாநில கணக்காயரால் இவ்வியக்ககத்தில் 13 . 06 . 2019 அன்று வழங்கப்பட்ட விபரங்களில் 508 ஆசிரியர் வைப்பு நிதி கணக்குகள் தணிக்கை செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

 எனவே , இப்பொருளில் விரைவு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் , அனைத்து பணிகளும் இம்மாத இறுதிக்குள் நிறைவும் செய்யப்படவேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது சார்ந்து இவ்வியக்ககத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் பல நினைவூட்டுகள் அனுப்பியும் தொலைபேசி மூலம் தெரிவித்தும் எவ்வித துரிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அறிய நேர்கிறது . இந்நேர்வில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் தேவைப்படுகிறது என்பதையும் இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது .

எனவே , இனியும் காலதாமதம் செய்யாமல் ஆசிரியர் சேம நல நிதிக் கணக்குகளை உள்ளாட்சித்துறை தணிக்கை செய்து 31 . 01 . 2020 - க்குள் மாநில கணக்காயருக்கு அனுப்பி அதன் நகலினை உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி