5 மற்றும் 8 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கைவிட பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதி - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2020

5 மற்றும் 8 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கைவிட பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதி - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிக்கை!


# பா . ம . க . தலைவர் ஜி . கே . மணி அறிக்கை

# 5 மற்றும் 8 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கைவிட பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதி

# பாமக . தொடர்முழக்கப் போராட்டம் இரத்து !

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ , மாணவியரின் கல்வியை கடுமையாக பாதிக்கும் 5 மற்றும் 8 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாளை ( 28 . 01 . 2020 ) செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்கள் . அதைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் அவர்கள் மருத்துவர் அய்யா அவர்களை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் . 5 மற்றும் 8 - ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் , அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று அரசு ஆணையிட்டிருப்பதாகவும் , இதுகுறித்து அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் மருத்துவர் அய்யா அவர்களிடம் அமைச்சர் தெரிவித்தார் . அதையேற்று நாளை பா . ம . க . நடத்தவிருக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . அதைக் கேட்ட மருத்துவர் அய்யா அவர்கள் , 5 மற்றும் 8 - ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டும் தான் இந்த சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என்றும் , இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் உறுதியாக இருப்பதாகவும் கூறினார் . மேலும் பொதுத்தேர்வை கைவிடும்படியும் கேட்டுக் கொண்டார் . அதையேற்ற பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் , 5 மற்றும் 8 - ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை அடுத்த ஆண்டு முதல் கைவிடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று மருத்துவர் அய்யா அவர்களிடம் உறுதியளித்தார் . பள்ளிக்கல்வி அமைச்சரின் இந்த வாக்குறுதியை ஏற்று நாளை நடைபெறுவதாக இருந்த தொடர்முழக்கப் போராட்டம் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .

1 comment:

  1. Exam necessary ! your Dr.children where did study explain This exam only measure student & Teacher learning teaching ability only

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி