IMPART செயல்திட்டம் தொடர்பான CEO செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2020

IMPART செயல்திட்டம் தொடர்பான CEO செயல்முறைகள்!


திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் வருகை பதிவை உயர்த்துதல் செயல் திட்டம் ( IMPART ) செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது . திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 பள்ளிகளில் IMPART செயல்திட்டம் நடைபெற்று வருகிறது . அதனைத் தொடர்ந்து கல்வி மாவட்ட அளவில் 23 . 01 . 2020ம் தேதி அன்று சிறந்த செயல் திட்டத்தை தேர்வு செய்வதற்கான காட்சிப் படுத்துதல் நிகழ்வு அந்தந்த வட்டார வளமையத்தில் ( திண்டுக்கல் , பழநி , வத்தலக்கண்டு , வேடசந்தூர் ) யில் நடைபெற்று முடிந்தது . கல்வி மாவட்ட அளவில் ஒவ்வொறு பள்ளியிலிருந்தும் 1ஆசிரியர் மற்றும் 5 பாடங்களில் ( குழுத் தலைவர் ) பாடம் ஒன்றுக்கு 1 மாணவர்கள் வீதம் 5 ( மொத்தம் - 6 ) நபர்கள் கலந்து கொண்டனர் .

இதனைத் தொடர்ந்து கல்வி மாவட்ட அளவில் வெற்றி பெற்ற தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் பாடங்களில் முதல் , இரண்டு , மூன்றாம் இடம் பிடிக்கும் மாணவ / மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் காட்சிப்படுத்துதல் நிகழ்வில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி