போகிப்பண்டிகை குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் ஊர்வலங்கள் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவு. - kalviseithi

Jan 9, 2020

போகிப்பண்டிகை குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் ஊர்வலங்கள் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவு.


அரசு / அரசு உதவி பெறும் - | சுயநிதி / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் போகிப்பண்டிகையினால் ஏற்படும் காற்றின் மாசு அளவை குறைக்க மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு “ புகையில்லா போகி 2020 " என்ற பதாகைகளுடன் மாணவர்களை ஊர்வலம் மற்றும் பேரணி நடத்தப்பட வேண்டும் என 08 . 01 . 2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சுழல் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது . எனவே அனைத்து வகை பள்ளிகளிலும் போகிப்பண்டிகை குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை உடனடியாக இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

SLOGAN - 1

1 . கொண்டாடுவோம் கொண்டாடுவோம் புகையில்லா போகியைக் கொண்டாடுவோம் .
2 . எரிக்க மாட்டோம் , எரிக்க மாட்டோம் , பழைய டயர் , டியூப் மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க மாட்டோம் .
3 . பாதுகாப்போம் பாதுகாப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் .

SLOGAN - 2

 4 . கொண்டாடுவோம் கொண்டாடுவோம் மாசற்ற போகியைக் கொண்டாடுவோம் .
5 . உதவுவோம் உதவுவோம் நமக்கு பயன்படாத பழைய பொருட்களை தேவையானவர்களுக்கு கொடுத்து உதவுவோம் .
6 . பாதுகாப்போம் பாதுகாப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி